இலங்கை நீதித்துறை வரலாற்றில் மின்னணு வழக்கு தாக்கல் நடைமுறை ஆரம்பம்

இலங்கை நீதித்துறை வரலாற்றில் ஒரு மாற்றத்தக்க யுகத்திற்குள் பிரவேசிக்கும் வகையில், இலங்கை உயர் நீதிமன்றம் வழக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்து ஆவணங்களற்ற முறையில் வழக்கு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கை உயர் நீதிமன்றத்தினால் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த (e-filing) செயலி முறைமையானது, டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இதற்கமைய, இந்த மின்னணு கோப்பு முறைமை 2026 பிப்ரவரி 10 முதல் இயங்கத் தொடங்கியதுடன், சட்டத்தரணிகள் இந்தச் செயலி மூலம் மின்னணு முறையில் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு

உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்முறையின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது ஏராளமான வழக்குகள் மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் செயல்முறையின் ஒரு முக்கிய கட்டமாக, 2026 மார்ச் 26 அன்று உயர் நீதிமன்றத்தின் பகிரங்க நீதிமன்றத்தில் காகிதங்களற்ற மின்னணு முறைமை அடிப்படையிலான முதலாவது வழக்கு விசாரணை நடைபெற்றது. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையில், நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர மற்றும் நீதியரசர் கலாநிதி சோபித ராஜகருணா ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இது இடம்பெற்றது.

இந்த வழக்கு மேலும் சிறப்பம்சத்தைப் பெறுவதற்கு காரணம், இது 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தமை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கின் தீர்ப்புக்கமைய, அரசாங்கத்திற்கு வழங்க உத்தரவிடப்பட்டிருந்த 3 மில்லியன் ரூபாய் நட்டஈட்டுத் தொகையை வழங்கத் தவறியமைக்காக, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்காகும்.

வழக்கு பகிரங்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கைப் பரிசீலிப்பதற்காக பாரம்பரியக் கோப்புகளுக்குப் பதிலாக, உயர் நீதிமன்றத்தினால் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் வழக்குக் கோப்பை நீதியரசர்கள் கணினி மூலம் பயன்படுத்தினர்.

பிரதிவாதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்றப் பதிவாளர் மனோதி ஹேவாவசம் பகிரங்க நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டியதுடன், குற்றப்பத்திரிகையில் தனது டிஜிட்டல் கையொப்பத்தை இட்டு மின்னணு முறைமையில் வெளியிட்டதன் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அதனை

அணுக வழிவகை செய்தார். குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக விசாரணை 2026 மே மாதம் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன் மூலம் ஆவணங்களற்ற வழக்கு விசாரணை எனும் புதிய அனுபவத்தை இலங்கை மக்களுக்கு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்த புதிய செயலியானது பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவினால் ஆரம்பிக்கப்பட்ட நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்கும்

“ஈ கோட்” திட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாகும். உயர் நீதிமன்றத்தினால் இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மாத்திரம் இது உருவாக்கப்பட்டமை இதன் சிறப்பம்சமாகும். இக்கட்டமைப்பை இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் உதவிப் பொது முகாமையாளர் (இணையதள வடிவமைப்பு) உவிந்து அனுராத உருவாக்கியுள்ளார்.

உயர் நீதிமன்றத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி மூலம் மிகவும் பயனுள்ள மற்றும் குறைந்த செலவிலான வழக்குத் தாக்கல் முறையை முன்னெடுக்க முடியும் என்பதுடன், எழுதுகருவிகளுக்காக செலவிடப்படும் பாரிய அளவிலான வெளிநாட்டு அந்நியச் செலாவணி மற்றும் செலவுகளைச் சேமிக்க முடியும். மேலும், இம்முறையிலுள்ள வசதி காரணமாக சட்டத்தரணிகள் பெருமளவில் மின்னணு முறையில் வழக்குகளைத் தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இலங்கை முழுவதிலுமுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இம்முறையை விரைவில் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

miss

கிளிநொச்சியில் 13 வயது சிறுவனைக் காணவில்லை!

April 17, 2026

கிளிநொச்சி பொன் நகரைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pim

280 டொலர் கச்சா எண்ணெய் கொடுக்கல் வாங்கல்: ஆதாரங்களை முன்வைக்குமாறு அரசாங்கம் சவால்

April 17, 2026

அரசாங்கம் ஒருபீப்பாய் கச்சா எண்ணெயை சுமார் 268 டொலர் என்ற அதிக விலைக்கு கொள்வனவு செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு

dddd

மத்திய ஒன்ராறியோ – ஒரிலியாவில் வெள்ள அபாயம் அதிகரிப்பு: மீட்புப் பணிகளில் ஊழியர்களும் தொண்டர்களும் தீவிரம்

April 17, 2026

மத்திய ஒன்ராறியோவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் பெய்து வரும் பலத்த மழை மற்றும் நீர்மட்டம் உயர்வு காரணமாக

NAMAL

எரிசக்தி அமைச்சர் ஜெயக்கொடியின் ராஜினாமா மிகவும் தாமதமானது – நாமல் ராஜபக்ஷ

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியின் பதவி விலகலை விமர்சித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ,

ff

ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழு உறுப்பினர்களது விபரங்களை உள்ளடக்கிய ஊடக அறிக்கை

April 17, 2026

தமிழ்த்தேசியப்பேரவையினால் 15.02.2026 அன்று குடிசார் அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள், துறைசார் நிபுணர்கள், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமயத்தலைவர்கள் உள்ளிட்ட

Apo

வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்

April 17, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர்

d

ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறப்பு – டொனால்ட் ட்ரம்ப்

April 17, 2026

ஈரான் கடற்பரப்பில் அமைந்துள்ள சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும்,

po

பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லாங்லியில் கத்திக்குத்து: ஒருவர் காயம்

April 17, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லாங்லி (Langley), வில்லோபி (Willoughby) பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் நடந்த “திட்டமிட்ட” (Targeted)

hf

மேற்கு ஆசியப் போரினால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை: ஐ.நா

April 17, 2026

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் நெருக்கடியின் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்களால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில்

ku

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி; குமார ஜெயக்கொடிக்கு ஆதரவாக அமைச்சர்கள் தற்காப்பு வாதம்

April 17, 2026

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி தொடர்பான எந்தவொரு ஊழல் விசாரணைகளிலும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்குத் தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை

cacv

கனடாவில் பல பெண்களைத் திருமணம் செய்துகொண்ட நபர் குறித்து பொலிஸார் விசாரணை

April 17, 2026

முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரும், MMA தற்காப்புக் கலை வீரருமான ஜேசன் வாஷிங்டன் (Jason Washington) என்பவர், தனது முந்தைய

5

இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவு

April 17, 2026

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர், 2026 வசந்தகாலக் கூட்டத்தின் (Spring Meetings) போது