இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விசனம்

மாணவர்களிடம் பணத்தை அறவிட்டு அவர்களுக்கே பாராட்டு விழாக்களை நடத்தும் வழக்கம் கடந்த ஆட்சி காலத்தில் தாராளமாக இடம்பெற்றது. நாம் அதற்கு எமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தோம். ஆனால் தற்போதைய அரசாங்கத்திலும் இவ்வாறான சம்பவங்கள் எல்லா இடங்களிலும் இடம்பெறுகின்றன என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வுகளே அதிகம் இடம்பெற்று வருகின்றன.

இதற்கு பாடசாலை சமூகமானது பெற்றோர்களை அழைத்து கதைத்து இந்நிகழ்வை பெற்றோர்களே செய்வது போன்ற போர்வையில் தாமே முன்னின்று சகல விடயங்களையும் கையாள்கின்றனர். எந்த இடத்திலும் பாடசாலையை சம்பந்தப்படுத்தாது பெற்றோர்களின் வங்கி கணக்கிலக்கங்களை வழங்கி அதில் பணத்தை சேகரித்து நிகழ்வை ஏற்பாடு செய்கின்றனர். இதற்காக இவர்கள் வாட்ஸ்அப் குழுவையும் வைத்துக்கொள்கின்றனர்.

இதில் என்ன ஆச்சரியமான சம்பவம் என்றால் இவ்வாறான நிகழ்வுகளின் பின்புலம் அறிந்து கல்வி அதிகாரிகளே நிகழ்வின் பிரதம அதிதிகளாகவும் சிறப்பதிதிகளாகவும் கலந்து கொள்கின்றனர். தரம் ஒன்று, சாதாரண தரம் மற்றும் உயர்தரத்துக்கு பெருந்தொகை பணத்தை அறவிட்டு சில பிரபல பாடசாலைகள் வெளிமாணவர்களை சேர்த்துக்கொள்கின்றன.

சில பாடசாலைகளில் ஆசிரியர்களே பெற்றோர்களாக இருப்பதால் அது குறித்து அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் கல்வி மறுசீரமைப்பை கொண்டு வருவதிலும் அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதிலும் முன்னிற்கும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியிலும் இவ்வாறு அப்பாவி பெற்றோர்களிடம் பணத்தைப் பெற்று பாராட்டு விழாக்களை இடம்பெறுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? மேலும் இந்த மாணவர்களில் தித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களும் இருக்கும் போது கல்லூரி நிர்வாகங்கள் இப்படி ஈவிரக்கமின்றி நடந்து கொள்ளக் கூடாது. இப்படி பாராட்டு விழாக்களை நடத்தும் கல்லூரிகளை இனம் கண்டு நிகழ்வின் செலவீனங்கள் மற்றும் நிதி சேகரிப்பு குறித்து முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பில் நாம் உயர்கல்வி மற்றும் மாகாண கல்வி அமைச்சுக்கு அழுத்தங்களை வழங்குவோம் எனத் தெரிவித்தார்.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்