இலங்கையில் வறுமையினை ஒழிக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது – ஜெயசந்திரமூர்த்தி றஜீவன்

சமூக சக்தி – பன்முக வறுமை ஒழிப்புத் திட்டத்தினை யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் முதல் முதலாக ஆரம்பித்து வைப்பதில் பெருமகிழ்வடைவதாக “பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைகள்” நிகழ்ச்சித்திட்டத்தின் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் மானிப்பாய் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் இன்றைய தினம் (02.06.2026) நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்  ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன்  தெரிவித்தார்.
மேலும், தெரிவிக்கையில், அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களில் மிக முக்கியமான வேலைத் திட்டமாக வறுமையினை ஒழிக்கும் சமூக சக்தி வேலைத் திட்டம் விளங்குவதாகவும், அரசாங்கத்தினால் வறுமையை குறைத்து, வாழ்வாதாரத்தினை உயர்த்தி மக்களின் வாழ்க்கையில் உற்சாகத்தினை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.
மேலும்,  சனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலில் – யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான  இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக சக்தி தலைவர்கள், பிரதேச சபையின் உறுப்பினர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து வறுமையினை ஒழிக்க பாடுபடுவதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் மூன்று பிரதான கொள்கைகளில் ஒன்றான கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளதாகவும், அடுத்து டிஜிற்றல் மயமாக்குதல் மூலம் ஊழல் ஒழிப்பு மற்றும் கணினி மயப்படுத்திய வேலைத் திட்டங்கள் நடைபெறுவதாகவும், அடுத்து வறுமை ஒழிப்பு வேலைத்திட்டமாக சமூக சக்தி வேலைத் திட்டம் இன்றைய தினம் நாடு ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இலங்கையில் வறுமையானது அண்ணளவாக 12% ஆகவுள்ளதாகவும், வடக்கு மாகாணத்தில் புள்ளிவிபர ரீதியாக 24% காணப்படுவதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 20% வறுமை காணப்படுவதாகவும் தெரிவித்ததுடன், சண்டிலிப்பாய் பிரதேசத்திலும் வறுமை அதிகமாகவுள்ளதாகவும், எல்லா மக்களையும் சமமாக கருதி அவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்கு பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாணமானது கல்வி, கலை, கலாசார பண்பாடுகளுக்கு முதன்மையாக விளங்குவதாகவும், தற்போது எமது பிரதேசத்தில் போதைவஸ்து, பல குழுக்களின் குற்றச் செயல்கள் அதிகரித்த நிலையில் அதனை கட்டுப்படுத்தி மாபியாக்களை ஒழிக்க எமது அரசாங்கம் பல்வேறு வழிகளில் போராடிவருவதாகவும், அதனை இல்லாதொழிக்க உரிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் தெரிவித்தார். மேலும், சண்டிலிப்பாய் பிரதேசத்தினை வறுமை அற்ற பிரதேசமாக மாற்ற பல திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், குறிப்பாக பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான வேலை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில், எமது நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயல் தாக்கத்தினால் எமது நாட்டிற்கு பாரிய பொருளாதார தாக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்தத்தினால் எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் என்பன ஏற்பட்டாலும், அரசாங்கமானது மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், புலம்பெயர் மக்கள் மற்றும் நாட்டை நேசிப்பவர்கள் அனைவரும் எம்முடன் ஒன்றிணைந்து “வளமான நாட்டை” உருவாக்க பங்களிப்புக்களை நல்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது

velmurugan-CPI

“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் த.வெ.க. அரசு!” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

August 24, 2026

ன்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து, மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து விரிவாக்கம் மற்றும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட

hindutamil-prod_2026-08-08_ozeaw6pt_mutharasan

“கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிராக த.வெ.க. அரசு செயல்படுகிறதா?” – முதலமைச்சருக்கு முத்தரசன் கேள்வி!

August 24, 2026

கும்பகோணம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் முத்தரசன்,