இலங்கையில் பாதுகாப்பான புலம்பெயர்வுக்கான தேசிய செயற்பாட்டுத் திட்டம்

பாதுகாப்பான, சீரான மற்றும் ஒழுங்குமுறையான புலம்பெயர்வுக்கான உலகளாவிய உடன்படிக்கையின் பிரகாரம் 2026 – 2028 ஆண்டு காலப்பகுதிக்கான இலங்கையின் தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது அமைச்சரவை பேச்சளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.

குறித்த அறிவிப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘பாதுகாப்பான, சீரான மற்றும் ஒழுங்குமுறையான புலம்பெயர்வுக்கான உலகளாவிய உடன்படிக்கை (The Global Compact for Safe, Orderly and Regular Migration) என்பது சர்வதேச புலம்பெயர்வில் அனைத்துப் பரிமாணங்களையும் முழுமையான விதத்தில் அமைந்த சர்வதேச ரீதியாகக் கலந்துரையாடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது செயற்கருவியாகும்.

குறித்த உடன்படிக்கை, இலங்கை அரசு 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஏற்றுக் கொண்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு மேலதிகமாக, புலம்பெயர் செயன்முறையில் திறன் விருத்தியை அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு செலாவணியை ஈட்டுவதற்கு பங்களித்தல் போன்ற நேர்மயமான விளைவுகளை மேலும் அதிகரிப்பதற்கு பாதுகாப்பான, சீரான மற்றும் ஒழுங்குமுறையான புலம்பெயர்வுக்கான உலகளாவிய உடன்படிக்கை மூலம் தேவையான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், மனித வியாபாரம் மற்றும் சட்ட விரோதமாக ஆட்களை ஏற்றிச் செல்லல் போன்ற புலம்பெயர்வுடன் தொடர்புடைய முறைகேடுகளைத் தடுப்பதற்கும் ஏதுவாக அமையும். குறித்த உடன்படிக்கையை இலங்கையில் அமுல்படுத்துவதற்கு அப்போதைய வெளிவிவகார அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சின் இணை ஏற்பாட்டின் கீழ் 2021 ஆம் ஆண்டில் செயற்பாட்டுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவால் 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் தேசிய செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த செயற்பாட்டுத் திட்டத்தை அமுல்படுத்த முடியாமல் போனதுடன், இக்குழு 2025 ஆம் ஆண்டில் மீண்டும் மீள்கட்டமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவால் அனைத்துத் தரப்பினர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு 2026 – 2028 ஆண்டு காலப்பகுதிக்கான பாதுகாப்பான, சீரான மற்றும் ஒழுங்குமுறையான புலம்பெயர்வுக்கான உலகளாவிய உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கான திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.

sajith 5

பௌத்தமதகுருவின் காவியுடையை சாதாரண மக்கள் களைவதற்கு உரிமையில்லை – இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் – சஜித்

October 13, 2026

இலங்கையின் அரசமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள நாட்டில் சமீபத்தில் இடம்பெற்ற சில விடயங்கள் கவலையளிக்கின்றன என எதிர்கட்சி தலைவர் சஜித்

chem_1

செம்மணி பற்றி வினோத உடைப் போட்டி; சிறுவனின் பெற்றோருக்கு விசாரணை!

October 13, 2026

ம்மணியில் இடம்பெற்ற அவலத்தை சித்தரித்து வினோத உடைப் போட்டியில் அதனைப் பிரதிபலித்த மாணவனின் பெற்றோரை மருதங்கேணிப் பொலிஸார் இன்று விசாரணைக்கு

toronto mayor election

நகரசபைத் தேர்தலுக்கு முன்னதாக மலிவு விலை வாழ்க்கை மற்றும் வீடமைப்பு நடவடிக்கைகளை டொரண்டோ வாக்காளர்கள் விரும்புகின்றனர்

October 13, 2026

டொரண்டோவின் முன்னணி மேயர் வேட்பாளர்கள் இந்த மாத நகரசபைத் தேர்தலுக்கு முன்னதாகத் தங்களது பார்வையையும் திட்டங்களையும் முன்வைத்து நகரம் முழுவதும்

Gnanasara-Thera

ஞானசார தேரர் கடும் மன உளைச்சலில்- நஞ்சருந்தி உயிர்துறக்கப்போவதாக தெரிவித்தார்- பௌத்தமதகுரு

October 13, 2026

பொதுபல சேனாவின் ஞானசார தேரர் கடும் மன அழுத்தத்தில் உள்ளார் விசம் அருந்தி தற்கொலை செய்து கொள்வது குறித்து சிந்திக்கின்றார்

Sakara

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சாகர காரியவசம்!

October 13, 2026

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை வெளிப்படுத்தினார். சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை

mini

அமைச்சரைச் சந்திக்க தமிழ் பெண்கள் சங்கம் கோரிக்கை

October 13, 2026

சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசாரத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிறுவுவதற்கு உத்தேசித்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கலாலயா கலாசார மற்றும் இளைஞர்

zer

சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினம்; 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு!

October 13, 2026

2050 ஆம் ஆண்டளவில் ‘பூஜ்ஜிய கார்பன்’ (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி

fue

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

October 13, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026

arju

அர்ச்சுனாவின் பதவியில் சிக்கல்: விரைவில் விசாரணை!

October 13, 2026

டாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும்

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்