இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; கருணாநிதி பேரன் யாருக்கும் அஞ்சமாட்டேன்: உதயநிதி அதிரடி!

திருச்சி

தஞ்சாவூரில் நடைபெற்ற மாபெரும் திமுக ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் பிரபல நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி, இன்று காலை சென்னையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். ஒரு தேசவிரோதியை அழைத்துச் செல்வது போலச் சாலை மார்க்கமாகத் தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு இரவு 7 மணியளவில் அவர் கொண்டு செல்லப்பட்டார். உண்மையில் தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டிய நிலையில், செங்கிப்பட்டியில் வைத்து விசாரணை என்ற பெயரில் பல கேள்விகளைக் கேட்டுவிட்டு அவரை விடுவித்துள்ளனர். சுமார் ஒன்றரை மணி நேர தீவிர விசாரணைக்குப் பிறகு, சென்னை திரும்புவதற்காகத் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அவர், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துத் தன் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு மிகக் கடுமையான பதிலடிகளைக் கொடுத்துள்ளார்.

“நான் எந்த இடத்திலும் யாரையும் தவறான எண்ணத்திலோ அல்லது தாழ்த்தியோ பேசவே இல்லை. எனது முழுமையான பேச்சு விவசாயிகளுக்கு மட்டுமே ஆதரவானது. ஆனால், நான் பேசாத சில விஷயங்களை திட்டமிட்டு எடிட் செய்து உள்நோக்கத்துடன் பரப்பி விட்டுள்ளனர். எனக்கும் திருமணமாகி மனைவி, பெண் குழந்தை, தங்கை என ஒரு குடும்பம் இருக்கிறது; தமிழகத்தில் உள்ள அனைவரையும் என் தாய் தந்தையாகவே பார்க்கிறேன். பெண்களைத் தாழ்த்திப் பேசும் வளர்ப்பை என் பெற்றோர் ஒருபோதும் எனக்குக் கொடுக்கவில்லை,” என மிக ஆவேசமாகத் தன் தரப்பு நியாயத்தை முன்வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் இரட்டை அர்த்தத்தில் பேசவே இல்லை; விவசாயிகளுக்காக ஒரே அர்த்தத்தில் தான் பேசினேன். ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் டெல்டாவுக்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கக் கர்நாடக அரசிடம் கேட்கும் தைரியம் இந்த தவெக அரசுக்குச் சிறிதும் இல்லை. நாளை சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், அங்கு மேகதாது அணை விவகாரத்தைத் திசைதிருப்பவே, தேசிய ஊடகங்கள் வரை இந்த விவகாரத்தைப் பேசிப் பெரிதாக்கியுள்ளனர்” என்று ஆளும் அரசை மிகக் கடுமையாகச் சாடினார்.

மேலும், “இந்தத் தரம்கெட்ட அரசின் பொய் வழக்குகளுக்கெல்லாம் கருணாநிதியின் பேரன் ஒருபோதும் பயப்பட மாட்டான். காவல் துறையினருக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன்; இந்த அச்சுறுத்தல்களைச் சட்டப்படி தைரியமாக எதிர்கொள்வேன். என் கைதுக்குக் கொந்தளித்து ஆர்ப்பாட்டம் செய்த திமுக உடன்பிறப்புகளின் அன்புக்குத் தலைவணங்குகிறேன்; அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நான் பேசியதை முழுமையாக ஆராயாமல் சில தலைவர்கள் கண்டனம் தெரிவித்தது வருத்தமளிக்கிறது. விவசாயிகளுக்காகப் பேசியதற்குக் கைது செய்யப்பட்டதை நினைத்து நான் கூச்சப்படப் போவதில்லை; இன்னும் 100 முறை இதேபோலப் பேசுவேன். இந்த முதலமைச்சருக்குத் தமிழ்நாடு மற்றும் திமுகவின் வரலாறு எதுவும் தெரியவில்லை; மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்கள் நிச்சயம் தகுந்த பதிலடி தருவார்கள். நாளை சட்டமன்றத்தில் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்குவார்,” எனத் தனது நிலைப்பாட்டைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

#UdhayanidhiStalin #DMK #TNPolitics #Trichy #ThalapathyVijay #TVK #TamilNaduNews #MKStalin #TamilNadu #ViralNews #UdhayanidhiArrest #Trisha #FarmersProtest #CauveryIssue #Mekedatu #DMKVsTVK #Thanjavur #TrendingTN #TamilPolitics #LatestNews

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.