இன்று யாழ்ப்பாணம், செம்மணியில் முன்னெடுக்கப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்டத்தின் 44ஆம் நாள் பணிகளின் போது, புதிதாக 8 மனித எலும்புக்கூடுகள் சுத்தப்ப டுத்தப்பட்டு அடையாளம் காணப்பட்டன.
இதன்மூலம், மூன்று கட்ட அகழ்வுகளிலும் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 491 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 489 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.




