இந்த ஊழலற்ற ஆட்சியில் கிழக்கில் நிலவி வரும் நிலம் சார்ந்த அநீதிகளுக்கு தீர்வு கிடைக்குமா?

கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் நிலம் சார்ந்த அநீதிகளுக்கு இந்த ஊழலற்ற ஆட்சியின் கீழ் என்றேனும் ஒரு நியாயமான தீர்வு கிடைக்குமா என குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் டனுசன் தெரிவித்துள்ளார்.

“நிலத்திற்காக ஒருங்கிணைவோம்” என்ற தொனிப்பொருளில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்புகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) சுயாதீன செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

திருகோணமலையில் ஒன்றுகூடிய அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் சார்பில் 15 பிரதிநிதிகள் இணைந்து இச்செயலணியை உருவாக்கியுள்ளனர்.

அகம் மனிதாபிமான வள நிலையம் மற்றும் சூழலியல் நீதிக்கான மக்கள் கூட்டு ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த செயலணியை அமைப்பதற்கான வழிகாட்டல்களை வழங்கியிருந்தன.

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் நில அபகரிப்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் இச்செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

இச்செயலணியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியபோதே குச்சவெளி பிரதேச சபை அங்கத்தவர் டனுசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,

“திருகோணமலை மாவட்டத்தில் நிலவி வரும் நில அபகரிப்பு, சிங்கள – பௌத்தமயமாக்கல் போன்ற பிரச்சினைகள் இன்னும் பேசுபொருளாகவே இருந்து வருகிறதே தவிர, இதுவரை நிரந்தரமான தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை. குறிப்பாக குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குள், தமிழ் பேசும் தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்களின் பூர்விக நிலங்கள் பல்வேறு காரணங்களின் பெயரில் அபகரிக்கப்படுகின்றன.

இவற்றுக்கு உதாரணங்களாக தென்னமரவாடி தொல்லியல், புல்மோட்டை தொல்லியல் மற்றும் புனித பூஜா பூமி, திரியாய் தொல்லியல் மற்றும் பூஜா பூமி, வனவளத்துறை ஆகியவற்றின் பெயரால் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களை கூறலாம்.

ஈழப் போருக்குப் பின்னர் நாட்டில் ஐந்து ஜனாதிபதிகள் மாறியபோதும், தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தரமான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை.

ஆட்சிகள் மாறினாலும், சிறுபான்மை மக்களின் நிலை மாற்றமடையவில்லை. கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் நிலம் சார்ந்த அநீதிகளுக்கு, இந்த ஊழலற்ற ஆட்சியின் கீழ் என்றாவது ஒரு நியாயமான தீர்வு கிடைக்குமா என்ற பெரும் நம்பிக்கையுடனேயே இன்றும் நாம் நில மீட்புக்காக ஒன்றிணைந்து போராடிக்கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்