தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு, கோவை ‘கொடிசியா’ வளாகத்தில் நேற்று துவங்கியது.
இயற்கை வேளாண்மையில் தயாரிக்கப்பட்டு, விளைபொருட்களை மதிப்புக் கூட்டிய பொருட்களாக உருவாக்கி சந்தைப்படுத்துவது தொடர்பான கண்காட்சியை, பிரதமர் மோடி பார்வையிட்டு, விவசாயிகளிடம் உரையாடினார்.
இயற்கை வேளாண்மை செய்வதற்கு ஏற்படும் இடர்பாடுகள், சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து நேரடியாக கேட்டறிந்தார். அதன்பின், வேளாண் மாநாட்டை துவக்கி வைத்து மோடி சிறப்புரை ஆற்றினார்.
பிரதமருக்கு, ஒருங்கிணைப்பாளர்கள் கருப்பையா, பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் இணைந்து மாலை அணிவித்து வரவேற்றனர். பருத்தித்துணியில் பாரத மாதா, பிரதமர் மோடி மற்றும் ஏர் உழவன் ஆகிய புகைப்படங்களுடன் நெசவு செய்யப்பட்ட சால்வையை, அத்திக்கடவு சுப்ரமணியம் அணிவித்து, கவுரவித்தார்.
இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்குவது, பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கும் ஏழு விவசாயிகளுக்கு, பிரதமர் விருது வழங்கி கவுரவித்தார்.