நேற்று உலக மனநல தினம். இந்நிலையில் மனநல ஆதரவு அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நடிகை தீபிகா படுகோனேவை இந்தியாவின் முதல் மனநல தூதராக மத்திய சுகாதார அமைச்சகம் நியமித்துள்ளது.
மனநலம் தொடர்பான உரையாடல்களை முன்னெடுத்துச் செல்வதில் தீபிகா படுகோனே ஆற்றிய தீவிர பங்களிப்பின் காரணமாகவே இப் பொறுப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் தீபிகா படுகோனே வெளியிட்டுள்ள பதிவில், உலக மனநல தினத்தன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் முதல் மனநல தூதராக நியமிக்கப்பட்டதில் பெருமையடைகிறேன்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் மனநலம் நிறைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்பதை தெரிந்துகொண்டேன். மேலும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.