இந்தியாவின் தீர்ப்பாயங்கள் சீர்திருத்த சட்டங்களின் முக்கிய ஷரத்துகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே நீக்கப்பட்ட ஷரத்துகளில் சிறிய திருத்தம் செய்து மத்திய அரசு மீண்டும் அறிமுகம் செய்திருப்பதாக விமர்சித்து உள்ளது.
மத்திய அரசு, 2021ல் தீர்ப்பாயங்கள் சீர்திருத்த சட்டம் கொண்டு வந்தது. திரைப்பட தணிக்கை சான்றிதழ் மேல் முறையீட்டு தீர்ப்பாயம் போன்ற சில மேல் முறை யீட்டு தீர்ப்பாயங்களை இந்த சட்டம் கலைத்தது.
மனு தாக்கல் எனவே, மத்திய அரசு கொண்டு வந்த தீர்ப்பாயங்கள் சீர்திருத்த சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.