அவுஸ்திரேலியாவில் ஒருவரைத் தாக்கிய இலங்கை இளைஞருக்கு சிறை!

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஓடும் ரயிலில் தனியாகப் பயணம் செய்த நபர் ஒருவரை கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 22 வயதான இளைஞனுக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி கிளீவ்லேண்ட் வழித்தட ரயிலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, குறித்த இளைஞன் மற்றும் அவரது நண்பருடன் இணைந்து, ரயிலில் தனியாகப் பயணம் செய்த நபருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னர் அவரை தாக்கியுள்ளனர்.

இதன்போது, இருவரும் இணைந்து அந்த நபரின் முகம் மற்றும் தலையில் பலமுறை தாக்கியதுடன், அவர் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது, மூடப்பட்டிருந்த கதவுகளின் வழியாக அவரை இழுத்துத் தடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்டவரின் பையைப் பறிக்க முயன்றபோது, 22 வயதான இளைஞன் கண்ணாடிப் பொருளொன்றால் அவரது தலையில் பலமாகத் தாக்கியதாகவும், இதனால் அவர் பலத்த காயமடைந்து இரத்தம் சிந்திய நிலையில் சிகிச்சை பெற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தின் பின்னர், பாதிக்கப்பட்ட நபர் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக குயின்ஸ்லாந்து மாநிலத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறப்பட்டது.

கிளீவ்லேண்ட் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 22 வயதான இளைஞன் தற்காப்புக்காகவே தாக்கியதாக வாதிட்டார். எனினும், அந்த வாதத்தை நிராகரித்த நீதவான் “தற்காப்பு என்பது வேறு; ஒருவரின் தலையில் தாக்குவது தற்காப்பாகாது. இது அப்பாவி ஒருவர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்” என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார்.

இந்தக் குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனை 12 மாதங்கள் என்பதால், குறித்த இளைஞருக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஏற்கனவே 89 நாட்கள் விளக்கமறியலில் கழித்திருந்த காரணத்தால், மீதமுள்ள தண்டனைக் காலத்தை கண்காணிப்பு நிபந்தனைகளுடன் பிணையில் கழிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த குறித்த இளைஞனுக்கு கடந்த ஆண்டு அவுஸ்திரேலியக் குடியுரிமை வழங்கப்பட்டிருந்தது. மெல்போர்னிலிருந்து வேலை தேடி பிரிஸ்பேனுக்கு சென்ற அவர், சம்பவம் நடந்த காலத்தில் வேலையற்றவராகவும் நிரந்தர இருப்பிடம் இல்லாதவராகவும் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதே தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான அவரது நண்பருக்கு ஏற்கனவே 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.