திய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி, எதிர்வரும் சர்வதேச சகோதரிகள் தினத்தை ஒகஸ்ட் மாதம் 9 ஆம் திகதியன்று கொண்டாடவுள்ளது.
இந்நிகழ்வு நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பூண்டுலோயா விவேகானந்த மத்திய மகா வித்தியாலயத்தில், மகளிர் அணியின் தலைவி திருமதி சிவகெளரி (சுடரி) தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வினில் பாடசாலை நூலகங்களுக்கு நூல்கள் வழங்குதல், பெண் பிள்ளைகள் தங்கியிருக்கும் காப்பகங்களுக்கு உடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல் என்பன இடம்பெறவுள்ளன.
இதில் விசேடமாக, நாடளாவிய ரீதியிலுள்ள மகளிர் அமைப்பைச் சேர்ந்த அங்கத்தவர்களின் கவியரங்க நிகழ்வும், கலை, கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் செல்வி பிரபா செல்வநாதன் மேற்கொண்டு வருகிறார்.
இதில் கலந்துகொள்ள விரும்புவோர் 075 4880172 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை அறியலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.