அல்பெர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிந்தால் அது பெரும் பேரழிவாக அமையும்; ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் எச்சரிக்கை!

கனடாவிலிருந்து அல்பெர்ட்டா மாகாணம் பிரிந்து செல்வது என்பது ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு “பேரழிவு” (Disaster) ஆக அமையும் என ஒன்டாரியோ (Ontario) மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். அல்பெர்ட்டா மாகாணத்தை தனியாகப் பிரிப்பது தொடர்பான சாத்தியமான வாக்கெடுப்பு ஒன்று எதிர்வரும் இலையுதிர்காலத்தில் நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் டேனியல் ஸ்மித் (Danielle Smith) அறிவித்ததைத் தொடர்ந்தே டக் ஃபோர்ட் இக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ‘சால்ட் ஸ்டே. மேரி’ (Sault Ste. Marie) பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த டக் ஃபோர்ட், அல்பெர்ட்டா மாகாணம் கனடாவை விட்டு வெளியேறுவதை தான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை எனக் குறிப்பிட்டார். அத்துடன், முதல்வர் டேனியல் ஸ்மித்தின் இந்த முன்மொழிவானது, அவரது அரசியல் தளத்தின் (Political base) ஒரு பகுதியினரைக் கவருவதை நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கனடாவிலிருந்து அல்பெர்ட்டா பிரிந்து செல்வது குறித்து, அரசியலமைப்பு ரீதியான உத்தியோகபூர்வ பொதுவாக்கெடுப்பு (Binding referendum) ஒன்றை நடத்துவதற்கான சட்டரீதியான செயல்முறைகளை மாகாண அரசு ஆரம்பிக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து, எதிர்வரும் அக்டோபர் 19ஆம் திகதி அல்பெர்ட்டா மக்கள் வாக்களிக்கவுள்ளனர் என மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.

இதேவேளை, முதல்வர் டக் ஃபோர்ட்டுடன் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த கூட்டாட்சித் தொழில் துறை அமைச்சர் மெலனி ஜோலி (Melanie Joly) கருத்துத் தெரிவிக்கையில், பலமான கனடா என்பது பலமான அல்பெர்ட்டா மாகாணத்திலேயே தங்கியுள்ளது எனத் தெரிவித்தார். அத்துடன் மாகாணங்களுக்கும் மத்திய (கூட்டாட்சி) அரசாங்கத்திற்கும் இடையில் சுமுகமான ஒத்துழைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

ஒட்டாவாவிலுள்ள நாடாளுமன்றக் கட்டட மறுசீரமைப்புப் பணிகளைப் பார்வையிடுவதற்காக வெள்ளிக்கிழமை வருகை தந்திருந்த பிரதமர் மார்க் கார்னியும் (Carney) இவ்விடயம் குறித்துக் கருத்து வெளியிட்டார். கனடா என்றும் “உலகின் மிகச்சிறந்த நாடாகவே” விளங்கும் எனக் குறிப்பிட்ட அவர், நாட்டை மேலும் பலப்படுத்துவதற்காக மத்திய அரசாங்கம் அல்பெர்ட்டா மாகாணத்துடன் இணைந்து நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண

dja

நாகவிகாரைச் சூழலில் வெசாக் வலயம்

May 31, 2026

யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை சனிக்கிழமை (30) வடக்கு மாகாண ஆளுநர்

cha

தரம் குறைந்த நிலக்கரி குறித்து சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

May 31, 2026

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட, தரம் குறைந்த நிலக்கரி நிரம்பிய கப்பலை வலுக்கட்டாயமாக இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக்

mano

வட-கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் விதத்தில் டில்வின் சில்வாவின் கருத்து உள்ளது – மனோ கணேசன்

May 31, 2026

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அவர்

cs

சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை

May 31, 2026

சிரியாவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில்

Judment

தையிட்டி விகாரைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு அபராதம்

May 31, 2026

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும்

kana

காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்

May 31, 2026

வடமராட்சி கடலிலிருந்து கடந்த 27 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளர்கள் நால்வர் தொடர்பில் விசேட அனுமதியுடன்

sl

இலங்கைத் தமிழ் பெண் சென்னையில் கொலை

May 31, 2026

சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவு (30)

lav

லாவோஸில் 1000 அடி ஆழமான குகைக்குள் சிக்கியவர்களில் நால்வர் மீட்பு

May 31, 2026

லாவோஸின் மத்திய ஷைசோம்போன் மாகாணத்தில் உள்ள நிலத்தடி குகையொன்றில் சுமார் 10 நாட்களாகச் சிக்கியிருந்தவர்களில் நால்வரை மீட்பதற்கு லாவோஸ் மற்றும்