கியூபெக் மாகாணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சில மாவட்டங்களில் மாணவர்களின் விடுப்பு விகிதம் 400 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2018-19 கல்வியாண்டுடன் ஒப்பிடுகையில், 2024-25 கல்வியாண்டில் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருக்கும் நாட்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.
கியூபெக் நகரத்தில் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களின் விடுமுறைகளானவை, 446 சதவீதம் அதிகரித்துள்ளது.
மொன்றியல் நகரத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் ‘காரணம் சொல்லப்படாத விடுமுறைகள்’ (Unexcused Absences) 108 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதிகப்படியான மன உளைச்சல் (Anxiety) மற்றும் பள்ளிகளில் பிற மாணவர்களால் கேலி செய்யப்படல் (Bullying) காரணமாகவே, மாணவர்கள் பள்ளியைத் தவிர்ப்பதாகக் கூறப்படுகின்றது.