அனோஜனின் உயிரைக் காப்பாற்ற அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உதவியை நாடுகிறது இலங்கைத் தமிழரசுக் கட்சி

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக தலையிடுமாறு கோரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பிலுள்ள இந்திய மற்றும் அமெரிக்க உயர் இராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் தலைமையிலான குழுவினர், கட்சியின் நாடாளுமன்றக் குழு எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் அந்தோனி வி. பிர்னோட் (Anthony V. Pirnot) ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்புகளின் போது, அனோஜனின் குடும்பத்தினரின் சார்பில் அவரது வழக்கு தொடர்பான விபரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்ததுடன், அனோஜனின் விடுதலையைப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர வழிகளை ஆராயுமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும் இரு நாடுகளிடமும் கோரிக்கை விடுத்தனர்.

அனோஜனின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் நிலவுவதால் இந்த விவகாரத்தில் அவசரத் தன்மை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய தமிழரசுக் கட்சி, மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தடுப்பதற்காக வெளிநாட்டு இராஜதந்திர தூதரகங்கள் மற்றும் சர்வதேச பங்காளிகளுடனான தனது தொடர்பாடல்களைத் தொடர்ந்து முன்னெடுக்கும் எனத் தெரிவித்துள்ளது.

so

சொய்சாபுர அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ; ஒருவர் பலி

September 23, 2026

மொரட்டுவை, சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் ‘C’ பகுதியில் இன்று (23) இரவு திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இந்தத்

d

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வூட்

September 23, 2026

ர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்தின் அதிவேகப் பந்துவீச்சாளர்களிலொருவரான மார்க் வூட் ஓய்வு பெற்றுள்ளார். இதுவரையில் 38 டெஸ்ட்களில் 119 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய

image_0a63b4f949

ஆசியப் போட்டிகளுக்கான இலங்கைக் குழாமில் வியாஸ்காந்த்

September 23, 2026

ஆசியப் போட்டிகளுக்கான இலங்கைக் குழாமில் யாழ்ப்பாணத்தின் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெற்றுள்ளார். இதேவேளை நிரோஷன் டிக்வெல்ல, அஷேன் பண்டார, சாமிக கருணாரத்ன,

Mid photos new.00_01_24_41.Still114

“இடைத்தேர்தலைத் திணிப்பவர்களே முழு செலவையும் ஏற்க வேண்டும்” – தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் ஆவேசம்!

September 23, 2026

திருப்பூர்: சொந்த காரணங்களுக்காகவோ அல்லது கட்சி மாறுவதற்காகவோ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் மீது இடைத்தேர்தலைத் திணிப்பவர்களே தேர்தலுக்கான முழு

kas

கொக்கட்டிச்சோலை கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 10 பெரல் கோடா மீட்பு

September 23, 2026

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டியனாறு குளம் பகுதியில், சட்டவிரோதமாக நடத்தப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் செவ்வாய்க்கிழமை (22) பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

7

“தாராபுரம் இடைத்தேர்தல்: செப். 30-ல் முதலமைச்சர் விஜய் சூறாவளிப் பிரச்சாரம்!” – 54 ஏக்கரில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட அரங்கம் அமைப்பு!

September 23, 2026

சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி முதலமைச்சர் ச.ஜோசப்

anita ana

டிரம்பின் கருத்துக்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் பதில்

September 23, 2026

டிரம்பின் கருத்துக்களுக்குப் பதிலளிக்குமாறு கேட்கப்பட்ட போது, ஒட்டுமொத்தக் குடியேற்றமானது “கனடாவின் செழிப்பை” உயர்த்தியுள்ள போதிலும், கூட்டாட்சி அரசாங்கம் 2024 ஆம்

trump june 26

கனடா “மில்லியன்கணக்கான” மக்களை அனுமதிப்பதன் மூலம் “தன்னையே அழித்துக் கொள்கிறது” – டிரம்ப் குற்றச்சாட்டு

September 23, 2026

கனடா “மில்லியன்கணக்கான மக்களை நாட்டிற்குள் அனுமதிப்பதன் மூலம் தன்னையே அழித்துக் கொள்கிறது” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

Zafrans-NW-Posts-19

தமிழ்-கனடிய நெட்ஃபிலிக்ஸ் நட்சத்திரத்தைக் இலக்கு வைக்கும் இனவெறி கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அர்ச்சுனா

September 23, 2026

தமிழ்-கனடிய நடிகையான மைத்ரேயி இராமகிருஷ்ணனின் சர்வதேச சாதனைகளைக் குறித்து இலங்கையர்கள் பெருமைப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

cf1f2111-9b1a-463c-b0ee-53760718788e

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உதவியை நாடுகிறது இலங்கைத் தமிழரசுக் கட்சி

September 23, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக தலையிடுமாறு கோரி, இலங்கைத்

image_d26eaa5491

முன்னாள் மாலைத்தீவு அதிபர் நஷீத், சிவராசா அனோஜன் விவகாரத்தில் உதவ முன்வந்துள்ளார்

September 23, 2026

மாலைத்தீவின் முன்னாள் அதிபர் மொஹமட் நஷீத், சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனின் விவகாரத்தில்

fire

மொரட்டுவை சொய்சாபுர வீட்டுத் திட்டத் தீ விபத்தில் ஒருவர் பலி; இருவர் காயம்

September 23, 2026

மொரட்டுவையில் அமைந்துள்ள சொய்சாபுர வீட்டுத் திட்டத்தின் ‘C’ பிரிவில் (Block ‘C’) இன்று (23) இரவு ஏற்பட்ட திடீர் தீ