மத்திய கிழக்கு மோதல் சூழலால் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை தற்போது போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் போர்நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக சந்தையில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு ஒரு பீப்பாய் 95 டொலராக குறைவடைந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
உடனடி விலைக்குறைப்பு: இந்தச் சாதகமான சூழலைக் கருத்திற்கொண்டு இன்று நள்ளிரவு அல்லது நாளைக்குள் எரிபொருள் விலையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த இரண்டு வார கால போர்நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி எரிவாயு, எரிபொருள், உரம் மற்றும் மருந்துப் பொருட்களின் விநியோகச் சங்கிலியை (Supply Chain) பலப்படுத்த அரசாங்கம் முனைய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.