சுமார் 50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 5 கிலோகிராம் 105 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பெந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 40-45 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.