வைத்தியசாலை பிரேத அறையில் பெண் உடல் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு கடுமையகத் தண்டிக்க வேண்டும்

வைத்தியசாலையொன்றில் பிரேத அறையில் இருந்த பெண்ணின் உடல் துஸ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி கவிரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (5) நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிரிழந்த பெண்ணொருவரின் உடல் வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இதனை நாங்கள் கண்டிக்க வேண்டும் என்பதுடன், இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

இப்போது மகளிர் விடயங்கள் தொடர்பில் நாங்கள் கதைக்கின்ற போது விடுமுறை இன்றி, சம்பளம் இன்றி 24 மணிநேரமும் பணியாற்றும் பெண்கள் வீடுகளில் உள்ளனர். இவர்களுக்காக நலன்புரிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கைத் திட்டத்தை இந்த வருடத்தில் செயற்படுத்துமாறு கோருகின்றோம்.

நான் அண்மையில் தும்பர புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு சென்றிருந்தேன். அங்கு கணவனின் தவறுக்காவும், பாலியல் இலஞ்சம் வழங்காத காரணத்தினாலும் மற்றும் பிணை வழங்க முடியாமலும் பெண்கள் பலர் அங்கு இருக்கின்றனர். இவர்களிடையே பலர் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை நீண்ட காலமாக வராதவர்களும் இருக்கின்றனர். இதற்காக முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு கோருகின்றேன் என்றார்.

WhatsApp Image 2026-03-06 at 12.04.15

பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயம் நோக்கிச் சென்ற படகு விபத்து: ஒருவர் உயிரிழப்பு

March 6, 2026

யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்கரைப் பிரதேசமான குருநகர் இறங்கு துறையிலிருந்து, பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய பெருநாளில் கலந்துகொள்ளச் சென்ற பக்தர்களின்

photo-collage.png (50)

ஒன்டாரியோவை உலகின் முன்னணி பேட்டரி உற்பத்தி மையமாக மாற்றும் திட்டம்!

March 6, 2026

ஒன்டாரியோவை உலகின் முன்னணி பேட்டரி உற்பத்தி மையமாக மாற்றும் எங்கள் திட்டத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை அடைந்தோம். அதற்காக, விண்ட்சர்

nu

’ஹேஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

March 6, 2026

சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வருகை தந்த இரு இளைஞர்கள், ‘ஹேஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருளுடன் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா

kesa

பாதாள உலகக் குழுத் தலைவர் கொலை வழக்கு:’கெசல்பெத்தர பத்மே’ விசாரணைக்காலம் அதிகரிப்பு

March 6, 2026

கொழும்பு நீதவான் நீதிமன்றக் கூண்டுக்குள் வைத்து, பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கனேமுல்ல சஞ்சீவ’வைச் சுட்டுக் கொலை செய்ய முயன்ற

nor

வடக்கின் சமர் ஆரம்பம்

March 6, 2026

உலகெங்கும் வாழும் யாழ். கல்வி நிறுவனங்களின் பழைய மாணவர்களாலும், விளையாட்டு ரசிகர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும்

iri

கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர் IRIS Bushehr கப்பல் இருந்த பணியாளர்கள்!

March 6, 2026

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர்

Judment

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது; எதிரான மனு

March 6, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடைச் சட்டம் கீழ் கைது

road-accident-1fbe3bd4f584940d0e9afe28e5117426-1

கிளிமடுச்சேனை விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலி!

March 6, 2026

புத்தளம், மதுரங்குளிய பொலிஸ் பிரிவின் கிளிமடுச்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில், 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கிளிமடுச்சேனை பகுதியைச்

v

அரசை பாதுகாக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கவேண்டும் – மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

March 6, 2026

மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

sen

சர்வதேச படுகொலைகள் பற்றிப் பேசுகின்றோம் செஞ்சோலையில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நீதி எங்கே?

March 6, 2026

செஞ்சோலையில் விமான தாக்குதல் மூலம் மோசமாக கொல்லப்பட்ட பெண் குழந்தைகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்

le

இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான லெபனான் மக்கள் இடம்பெயர்வு

March 6, 2026

லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்கள் காரணமாக இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான

doha

டோஹாவின் வான்பரப்பில் இஸ்ரேலின் ஏவுகணைகள் முறியடிப்பு!

March 6, 2026

கட்டார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு வருவதால், நகரின் மத்திய பகுதியில் இடைவிடாத வெடிப்புச் சத்தங்கள்