விண்வெளித் தொழிற்சாலையில் வெடிப்புச் சம்பவம்: ஐவர் உடல்சிதறி உயிரிழப்பு

தென் கொரியாவின் முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ஹன்வா ஏரோஸ்பேஸ்’ தொழிற்சாலையின் ஏவுகணை எரிபொருள் உற்பத்திப் பிரிவில் இன்று திங்கட்கிழமை (01) ஏற்பட்ட பயங்கர வெடிப்பு மற்றும் தீ விபத்தில் சிக்கி ஐந்து ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

தென் கொரியாவின் டேஜியோன் நகரில் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்தத் திடீர் விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறித்து அந்நாட்டு சுகாதார மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் விடுத்துள்ள விசேட செய்திக்குறிப்பில்,

வெடிப்புச் சம்பவத்தின் வீரியம் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் மிக மோசமாகச் சிதைவடைந்துள்ளதால், பலியானவர்களை உடனடியாக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த ஐந்து பேரில் இருவர் 20 வயதுடைய தற்காலிக ஊழியர்கள் என்பதுடன், அனைவரும் ஹன்வா நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஆவர்.

விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த இருவரில் ஒருவர் மிகக் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இவர்கள் இருவரும் வெடிப்பு நிகழ்ந்த உடனே தொழிற்சாலையிலிருந்து தாங்களாகவே தப்பியோடி உயிர் பிழைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் ஏவுகணை எரிபொருளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளிலிருந்து வெடிபொருட்களை அகற்றுவதற்காக, தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போதே இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், தீ விபத்தை ஏற்படுத்திய இந்த வெடிப்பின் உண்மையான காரணம் குறித்து தீயணைப்புப் பிரிவினர் மற்றும் நிபுணர் குழுவினர் தொடர்ந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விபத்து நடந்த ஹன்வா ஏரோஸ்பேஸ் தொழிற்சாலையானது பெரிய ரக உந்துவிசை இயந்திரங்களை உற்பத்தி செய்யும் மற்றும் ஏவுகணை எரிபொருள்களைக் கையாளும் மிக முக்கிய இராணுவத் தளமாகும். இதன் காரணமாக, நாட்டின் தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் இத்தொழிற்சாலையின் உள் வரைபடத்தை அணுக அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் சற்றுத் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, விபத்து குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் விபத்தை எதிர்கொள்ளவும், அதன் பின்னணியை ஆராயவும் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் திரட்டுமாறு அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மறுபுறம், விபத்து குறித்துப் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ள நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சோன் ஜே-இல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும், விசாரணை அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்துச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சர்வதேச பங்குச் சந்தையில் ஹன்வா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.8% ஆலும், அதன் தாய் நிறுவனமான ஹன்வா கோர்ப் நிறுவனத்தின் பங்குகள் 3.4% ஆலும் மதிய வர்த்தகத்தில் திடீர் வீழ்ச்சியைக் கண்டுள்ளன.

canada cri

கடமைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு: கனடா கிரிக்கெட் சபையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்தது ஐசிசி (ICC)

June 1, 2026

சர்வதேச கிரிக்கெட் பேரவையானது (ICC), தனது “உறுப்பினர் கடமைகளை பாரதூரமான முறையில் மீறியுள்ளதாகக்” குறிப்பிட்டு, கனடா கிரிக்கெட் சபையை (Cricket

HHATLAYVLFHQPKS2NTL6L6QWYE

நோவா ஸ்கோஷியாவில் (Nova Scotia) வாகன சோதனையின் போது சட்டவிரோத கஞ்சா மற்றும் போலி புகையிலை பறிமுதல்: ஒருவர் கைது

June 1, 2026

நோவா ஸ்கோஷியாவின் (N.S.) கோஃப்ஸ் (Goffs) பகுதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான வாகன சோதனையின் போது, பெருமளவிலான சட்டவிரோத கஞ்சா

7XB3I7MVEJHKZIJDR5JZWGVPA4

வோன் (Vaughan) துப்பாக்கிச் சூடு: இருவர் மீது முதல்தரக் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது; மற்றொருவருக்கு வலைவீச்சு!

June 1, 2026

கடந்த மாதம் ஒன்ராறியோவின் வோன் (Vaughan) பகுதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, இரண்டு ஆண்கள் மீது முதல்தரக்

Mid photos new.00_01_48_25.Still074

“ஊழல், லஞ்சம் இல்லாத ஆட்சியை ஒரு நாள் நடத்தி காட்டுவேன்!” – திருச்சி மாஸ் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அசுர வேக அதிரடி முழக்கம்!

June 1, 2026

திருச்சி: “தமிழகத்தில் ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத ஒரு நேர்மையான உன்னத ஆட்சியை நான் கண்டிப்பாக நடத்திக் காண்பிப்பேன்; என்னை

Meegoda-Accident-court

மீகொட விபத்து ஒரு ‘திட்டமிட்ட படுகொலை’: பொலிஸார் அதிரடி அறிவிப்பு

June 1, 2026

மீகொட பகுதியில் இடம்பெற்ற கொடிய வாகன விபத்து குறித்து பொலிஸார் அதிர்ச்சியூட்டும் புதிய விபரங்களை வெளியிட்டுள்ளனர். இச்சம்பவமானது பலரின் மரணத்திற்கு

photo-collage.png (45)

செம்மணியில் தாயத்துடன் எலும்புக்கூடு

June 1, 2026

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட எலும்புக்கூடு கழுத்தில் கட்டப்படும் தாயத்துடன் காணப்படுகிறது. குறித்த தாயத்து

elder

தனியாக வசிக்கும் முதியோர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர கோரிக்கை

June 1, 2026

தனியாக வசிக்கும் முதியோர்கள் மற்றும் தனிநபர்கள் குற்றச்செயல்களுக்கும் ஏனைய ஆபத்துகளுக்கும் இலக்காகும் அபாயம் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள ஸ்ரீலங்கா பொலிஸார்,

toronto police12

கனடிய வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் போலி கால்பந்து சீருடைகள் பறிமுதல்: டொராண்டோ பொலிஸார் அதிரடி நடவடிக்கை

June 1, 2026

கனடா நாட்டின் வரலாற்றிலேயே மிக அதிக அளவிலான போலி கால்பந்து ஜெர்சிகள் (Soccer jerseys) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டொராண்டோ பொலிஸார்

cong

எபோலா வைரஸ் கொங்கோவில் தீவிரமாகப் பரவுகின்றது!

June 1, 2026

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றின் பரவல் மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு தற்போதைய நிலைமை ‘ஆழ்ந்த கவலையளிப்பதாக’

iran

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தத்தை எடடுவதில் இருதரப்பும் இழுபறி

June 1, 2026

மேற்காசியாவில் பல மாதங்களாகத் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தாயாரிக்கப்பட்டுள்ள வரலாற்றுச்

d

விண்வெளித் தொழிற்சாலையில் வெடிப்புச் சம்பவம்: ஐவர் உடல்சிதறி உயிரிழப்பு

June 1, 2026

தென் கொரியாவின் முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ஹன்வா ஏரோஸ்பேஸ்’ தொழிற்சாலையின் ஏவுகணை எரிபொருள் உற்பத்திப் பிரிவில்

suresh sale

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு

June 1, 2026

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலேயை, மேலும் 90நாட்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவின்