விஜய் ஆலோசனை; அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா?

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை உள்ளது. தேர்தலுக்கு புது வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தால் தேர்தல் களம் ஆரம்பம் முதலே அனல் பறந்து வருகிறது.

ஆளுங்கட்சியான தி.மு.க. 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு வலுவாக தேர்தலை சந்திக்கிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும் தி.மு.க.வை எதிர்க்க இந்த படை போதாது என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை இணைப்பதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வருகின்றன.

இதற்கான, ஆலோசனையை ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், நடிகருமான பவன் கல்யாண், நடிகர் விஜய்யுடன் மேற்கொண்டார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, ஆடை விஷயத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை பின்பற்றி, காக்கி பேண்ட், வெள்ளை நிற சட்டையை விஜய் அணிந்து வருகிறார்.

சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற சகோதரர் வீட்டு இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த ஜெகன்மோகன் ரெட்டியை விஜய் சந்தித்து அரசியல் ஆலோசனைகளை கேட்டுப் பெற்றதாக பரபரப்பாக பேசப்பட்டது.

அப்போது, “ஒரு மாநிலத்தில் அரசியல் கட்சி நடத்தும் நீங்கள், ஏன் தேவையில்லாமல் மத்திய அரசை எதிர்த்து பேசி பகைத்துக்கொள்ள வேண்டும். தற்போதைய சி.பி.ஐ. விசாரணைக்கு அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். எனவே, நீங்கள் மாநில கட்சிகளை மட்டும் விமர்சனம் செய்யுங்கள்” என்று ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது.

அதன்பிறகுதான் தனது பிரசார கூட்டங்களில், மத்திய அரசை விமர்சிப்பதை நடிகர் விஜய் நிறுத்திக்கொண்டார். தற்போது, கூட்டணி குறித்து பவன் கல்யாண் வழங்கிய ஆலோசனையையும் நடிகர் விஜய் ஏற்றுக்கொள்வார் என்றே தெரிகிறது.

நடிகர் விஜய்யிடம் பவன் கல்யாண், “திருப்பதியில் நடந்த பெரும் மாநாட்டில் ஏராளமான மக்கள் வந்திருந்தபோதும், எனது அண்ணன் சிரஞ்சீவியால் அங்கு வெற்றி பெற முடியவில்லை.

நானும் கூட வெற்றி பெற முடியவில்லை. அதன் அடிப்படையில் ஒரு சாணக்கியத்தனமான அரசியல் முடிவை எடுக்காமல் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன், குறிப்பாக தெலுங்கு தேசம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்தேன்.

அதன் மூலம் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 23 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்று ஜனசேவா அரசியலைத் தக்க வைத்துக்கொண்டேன். எனவே, அதேபோல் நீங்களும் சாணக்கியத்தனமாக செயல்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து உங்களுக்கான அரசியல் இடத்தை உறுதி செய்துகொள்ளுங்கள்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

அ.தி.மு.க. கூட்டணிக்கு தமிழக வெற்றிக் கழகம் வந்தால், 50 இடங்களுக்கு குறையாமல் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கட்சியின் தலைவர் விஜய்யுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இனி இறுதி முடிவை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்தான் எடுக்க வேண்டும். தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தொடங்காமல், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் காத்திருப்பது இதற்குத்தானாம்.

தற்போது, விஜய்யுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் பா.ஜ.க.வின் முயற்சி வெற்றி பெற்றால், வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு கடும் சவால் அளிப்பதுடன் தேர்தலில் வெற்றி பெறவும் பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

fsfsdf

கார்னி தலைமையிலான கட்சி இடைத்தேர்தலில் பெரும்பான்மை பெற 53% கனடியர்கள் விருப்பு

April 12, 2026

திங்கட்கிழமை நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கூட்டாட்சி லிபரல் கட்சி, பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான இடங்களை

sdfsfs

சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் அகழ்வு முயற்சி?

April 12, 2026

மட்டக்களப்பு, மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மொரட்டுவை பிரதேச

d

சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க லிபரல் கட்சி தீர்மானம்

April 12, 2026

கனடியர்கள் சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்துவதற்கான தகுதியுள்ள வயதை 16 ஆக நிர்ணயிப்பதற்கு ஆதரவாக ஃபெடரல் லிபரல் கட்சியினர் வாக்களித்துள்ளனர்.

womenArrest_1200px_22_11_21-1000x600-1

வௌிநாட்டு பெண் கட்டுநாயக்கவில் கைது

April 12, 2026

தமது உடலில் கொக்கெய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்து நாட்டுக்குள் கொண்டு வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், இன்று (12) கட்டுநாயக்க

heat wa

நாளை அதிக வெப்பம்!

April 12, 2026

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் நாளை (13) வெப்பச் சுட்டெண்

soc

சமூக ஊடகப் பாவனையில் கவனம்!

April 12, 2026

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

lo

பாலத்திலிருந்து லொறி வீழ்ந்து விபத்து: இருவர் பலி

April 12, 2026

வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பாலத்திலிருந்து லொறி ஒன்று கவிழ்ந்ததில், அதன் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய

death

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

April 12, 2026

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தாந்தாமலை பகுதியைச் சேர்ந்த 58

rajee

வரலாற்று ரீதியான தொடர்புகளையும் புதுப்பிக்க தலைமன்னார் – இராமேஸ்வரம் படகுச் சேவையை மீள ஆரம்பிக்குமாறு பிரேரணை

April 12, 2026

தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையிலான வரலாற்றுப் புகழ்மிக்க படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்கக் கோரும் விசேட பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில்

kad

யாழ்.நாகர்கோவில் கடற்பரப்பில் கடல் அட்டை பிடித்த 6 பேர் கைது!

April 12, 2026

யாழ்ப்பாணம் நாகர்கோவில் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர முக்குளிப்பில் (Diving) ஈடுபட்டு கடல் அட்டைகளைப் பிடித்த 6

arr

விசேட அதிரடிப்படை வீரர் உட்பட ஆறு பேர் கைது

April 12, 2026

மட்டக்களப்பு – கரடியனாறு பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் யூ மற்றும்

lak

சிங்கங்களாகத் திரியும் எதிர்க்கட்சியினர் பூனைக்குட்டிகளாக மாறிவிடுகின்றனர் – லக்மாலி ஹேமச்சந்திர

April 12, 2026

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்துக்கு வருகை தரும் போது, சிங்கங்களாகத் திரியும் எதிர்க்கட்சியினர் பூனைக்குட்டிகளாக மாறிவிடுகின்றனர் என்று தேசிய மக்கள்