சென்னை:
தென்மாநிலங்களில் த.வெ.க.வை விரிவுபடுத்த திட்டம்
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற தென்மாநிலங்களிலும் கட்சியை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் த.வெ.க. திட்டமிட்டு அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
பா.ஜ.க.விலிருந்து விலகிய நடிகர் தேவன்
மலையாளத்தில் 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், தமிழில் ‘பாட்ஷா’, ‘வாத்தியார்’, ‘ஆதி’, ‘சிவகாசி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களிலும் நடித்துப் புகழ்பெற்றவர் பிரபல மலையாள நடிகர் தேவன். இவர் கடந்த 2024-ஆம் ஆண்டு ‘கேரளா மக்கள் கட்சி’ என்ற தனிக்கட்சியைத் தொடங்கி, பின்னர் அதை பா.ஜ.க.வுடன் இணைத்தார்.
பா.ஜ.க.வில் அவருக்கு மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பா.ஜ.க.வில் தீவிரமாக இயங்கி வந்த தேவன், கடினமாக உழைத்தும் கட்சியில் தனக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் கூறி, கடந்த 17-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க.வில் இருந்து முழுமையாக விலகினார்.
த.வெ.க.வில் இணைய முடிவு
பா.ஜ.க.விலிருந்து விலகிய நடிகர் தேவன், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக வரும் 10-ஆம் தேதி சென்னை வரவுள்ள அவர், முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து முறைப்படி த.வெ.க.வில் இணைய உள்ளார்.
கேரள மாநிலத் தலைவர் பதவி?
கேரளாவில் த.வெ.க.வின் கட்டமைப்பை பலப்படுத்தும் நோக்கில், நடிகர் தேவனுக்குக் கேரள மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
#ActorDevan #ChiefMinisterVijay #TVKParty #TVKGovernment #TamilNaduPolitics #KeralaPolitics #DevanJoinsTVK #BJPKerala #VijayFans #KeralaTVK #Kollywood #Mollywood #ChennaiNews #PoliticalUpdates #TamilNews #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates #SouthIndiaPolitics #ActorVijay