வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு

எரிபொருள், வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு
அரசாங்க நிறுவனங்கள் எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, எதிர்காலத்தில் நாட்டுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதில் தடைகள் ஏற்படக்கூடும் என்பதால், தற்போதுள்ள எரிபொருள் கையிருப்புகளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கும் இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அனைத்து அரசியலமைப்புச் சார்ந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இந்த வழிகாட்டல் ஆலோசனைகள் நேற்று (23) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதன் ஊடாக அரச அலுவலகங்களின் பணியாளர் போக்குவரத்து மற்றும் எரிபொருள் முகாமைத்துவத்திற்காக அரச நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் விரிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகத்தர்கள் கடமைக்கு வருகை தரும் போது தனித்தனி வாகனங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, முடிந்தவரை பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அல்லது குழுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும், களப்பணிகளுக்காக குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களைப் பயன்படுத்தும் வகையில் தினசரி போக்குவரத்துத் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் வலுசக்தியை சேமிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, முடிந்தவரை இயற்கையான வெளிச்சத்தைப் பயன்படுத்தவும், குளிரூட்டிகளுக்குப் (Air Conditioners) பதிலாக மின்விசிறிகளைப் பயன்படுத்தவும் அந்த வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனங்களில் மின்தூக்கி (Lift) பயன்பாட்டைக் குறைத்து படிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், உள்ளூராட்சி நிறுவனங்களினால் கட்டுப்படுத்தப்படும் மின்விளக்குகளை தேவையற்ற நேரங்களில் அணைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

தவிர, அதியுயர் பாதுகாப்பு வலயங்களைத் தவிர ஏனைய வீதிகளில் தற்காலிக தீர்வாக மின்விளக்குகளை அணைப்பதற்கும், பகல் நேரங்களில் நிறுவனங்களிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளைச் செயலிழக்கச் செய்வதற்கும் அந்த வழிகாட்டல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அரச நிறுவனங்களின் செயல்பாட்டு நடைமுறைகள் குறித்தும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

நிறுவனத்திற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் காணப்படுமாயின், பணியாளர்களை அலுவலகத்திற்கு அழைக்காமல் இணையவழி (Online) ஊடாகச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடமை நேரத்திற்குப் பின்னரும் வார இறுதி நாட்களிலும், அத்தியாவசியத் தேவை தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் அலுவலகங்களை மூடி வைப்பதை உறுதி செய்யுமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெளிப்புறத் தாக்கங்களின் போது அனைத்து அரச அதிகாரிகளும் பொதுமக்களுக்கு முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும் எனவும், தேசிய வலுசக்தி சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க உறுதி பூண வேண்டும் எனவும் அந்த வழிகாட்டல்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

seeman

கனிமொழி ஆளுமையுள்ள பெண் அவருக்கு சீட் கொடுக்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுப்பார்கள்? – சீமான்

March 25, 2026

“கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சீட் கொடுக்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுப்பார்கள்?” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்

boat

தமிழக மீனவர்கள் இருவரை விடுவித்தது இலங்கை

March 25, 2026

ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து கடலுக்குச் சென்ற வரப்பிர​சாதம் என்​பவரது விசைப்​படகையும், படகி​லிருந்த கம்ன்​ஸ்​டன் ராஜ், மினிட்டோ ராயப்பன் ஆகிய 2

Palan

அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பழனிசாமி

March 25, 2026

தமிழகத்​தில் அதி​முக ஆட்​சிக்கு வந்​தால், அரிசி ரேஷன் கார்​டுக்கு இலவச பிரிட்​ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்​டுக்கு 3 காஸ்

Kamal

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை – கமல்ஹாசன்

March 25, 2026

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. அறிவித்துள்ளார். சென்னை அண்ணா

modi tru

ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து மோடி – ட்ரம்ப் கலந்துரையாடல்!

March 25, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும்

Ura

நாட்டின் உரக் கையிருப்பினைச் சந்தையில் பேணுவதற்கு இணக்கம்

March 25, 2026

அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான உரக் கையிருப்பினைச் சந்தையில் பேணுவதற்காக, விவசாய அமைச்சுடன் இணைந்து செயற்பட உர நிறுவனங்கள் ஜனாதிபதியிடம்

pul

புளியங்கூடலைச் சேர்ந்த பெண் பாதசாரி கடவையில் வாகனம் மோதி உயிரிழப்பு!

March 25, 2026

யாழ்ப்பாணத்தில் பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். ஊர்க்காவல்துறை – புளியங்கூடல்

Arun Siddar

யாழ். பல்கலைக்கழகம் தமிழர்களின் பண்பாட்டுக் காவலர் இல்லை – அருண் சித்தார்த்

March 25, 2026

யாழ். பல்கலைக்கழகம் தமிழர்களின் பண்பாட்டுக் காவலர் இல்லை என சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்

Judment

போதைப்பொருள் வர்த்தகம் செய்த பெண்ணின்; சொத்துகள் முடக்கம்

March 25, 2026

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் சந்தேகநபர் ஒருவருக்குச் சொந்தமான 300 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை பொலிஸார் பறிமுதல்

qui

இயற்கை எரிவாயு; ஒப்பந்த விலக்கு நிலையை கட்டார் எனர்ஜி நிறுவனம் பிரகடனம்?

March 25, 2026

இத்தாலி, பெல்ஜியம், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கான தமது நீண்டகால திரவ இயற்கை எரிவாயு விநியோக ஒப்பந்தங்கள் சிலவற்றில்

Anu

மத்திய கிழக்கு நிலவரம் அநுரவுக்கும் – மோடிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்

March 25, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மத்திய

old

நலன்புரித் திட்ட முதியோர் கொடுப்பனவுக்கான அறிவிப்பு

March 25, 2026

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு குறித்து நலன்புரி