வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வில்லை; 30 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பு

2027 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினை புறக்கணிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 30 ஆம் திகதி ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது.

2027 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட கல்வித் துறை ஊழியர்களின் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்ட போதிலும், இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய, நவம்பர் மாதம் 30 ஆம் திகதி சுகவீன விடுமுறை அறிக்கை சமர்ப்பித்து ஒருநாள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் சுமார் 250,000 ஆசிரியர்கள் மற்றும் 10,110 பாடசாலைகளின் ஆசிரியர்கள் – அதிபர்கள் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் துரிதத் தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மேலும் தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜோசப் ஸ்டாலின்,

“2027 வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வித் துறை புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எமது கடும் எதிர்ப்பு உள்ளது. இது தொடர்பில் நாம் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் பேசியுள்ளோம். எதிர்வரும் முதலாம் திகதிதான் விசேடமாகக் கல்வி விவாதம் நடைபெறவுள்ளது. எனவே, இந்தக் கல்வி விவாதத்திலாவது இது தொடர்பில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பிரிவெனா ஆசிரியர்கள் என அனைவரின் பிரச்சினைகள் தொடர்பிலும் எவ்வித வேலைத்திட்டமும் இல்லை. இந்த நிலையில், ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கக் கூட்டணி என்ற ரீதியில் எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி ஒருநாள் சுகவீன விடுமுறை அறிக்கை சமர்ப்பிக்கும் நடவடிக்கைக்குச் செல்லத் தீர்மானித்துள்ளோம். இந்த நாட்டில் உள்ள சுமார் 250,000 ஆசிரியர்கள், அதேபோல் 10,110 பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அனைவரும் இதில் இணைவார்கள் என்பதைத் தெளிவாகக் கூற வேண்டும். அதனால், கல்வித் துறை தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர எமக்கு வேறு மாற்று வழியில்லை.” என்றார்.

cour

யாழ் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை

November 21, 2026

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக,

satti

சாட்டி மாவீரர் துயிலுமில்ல வழக்கில் தீர்வு

November 21, 2026

டை செய்யப்பட்ட அமைப்புகளின் அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ காட்சிப்படுத்தாது உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் உரிமை மக்களுக்கு உண்டு எனச் சுட்டிக்காட்டியுள்ள ஊர்காவற்றுறை

jos sta

வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வில்லை; 30 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பு

November 21, 2026

2027 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினை புறக்கணிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 30

nin

நிந்தவூர் கடற்கரையில் நீராடச் சென்ற மாணவரும் காப்பாற்றச் சென்ற நபரும் மாயம்

November 21, 2026

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் நேற்று(20) மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில்,

pillai

பிள்ளையானுக்குப் பிணை கோரி மனு

November 21, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்

ha

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் குழு பிரதமர் சந்திப்பு

November 21, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche உள்ளிட்ட தூதுக்குழுவினர் நவம்பர் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி

bu

Builders Gateway நிர்மாணத்துறை வசதியளித்தல் பிரிவு திறந்து வைப்பு

November 21, 2026

அரச நிர்மாணத்துறை பணிகளின் போது தனியார் நிறுவனங்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, தடைகளை நீக்கி

WhatsApp Image 2026-11-21 at 06.49.57

தமிழீழத் தேசியக்கொடி நாள்; மாவீரர் வார ஆரம்ப நிகழ்வு 2026

November 21, 2026

மிசிசாகா நகர மேயர் Alvin Tedjo மற்றும் முக்கிய அரச பிரமுகர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்வு! இன்று நவம்பர் 21ஆம்

Parl

இரண்டாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

November 20, 2026

​​ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம்

images

வடக்கின் சிறந்த பிரதிநிதியாக சிவாஜிலிங்கம் திகழ்ந்தார் – NSSP மற்றும் USP இரங்கல்

November 20, 2026

தமிழ் மக்களின் விடுதலை அபிலாசைகளை நனவாக்கும் முயற்சிகளில், தெற்கின் ஜனநாயக சக்திகள் மற்றும் உழைக்கும் வர்க்க இயக்கங்களுடன் இணைந்து தொடர்ந்து

keth

கீதாஞ்சலிக்கு விளக்கமறியல் நீடிப்பு

November 20, 2026

கொழும்பு கோட்டை டிரான்ஸ்வேர்க்ஸ் சதுக்கக் காணியை கிரிஷ் நிறுவனத்திற்குக் குத்தகைக்கு வழங்கும் கொடுக்கல் வாங்கலில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு

thada

274 மீன்பிடி வலைகளுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது

November 20, 2026

இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வியாழக்கிழமை (19.11.2026) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்