வனத்தவில்லுவ (Wanathawilluwa), மங்களபுர களப்பில் பூக்கள் பறிப்பதற்காகப் படகில் பயணித்த 4 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உள்ளூர் பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி பயிலும் 5 மாணவர்கள் இன்று (30) மாலை மங்களபுர களப்புப் பகுதியில் படகில் பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரெனப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் படகிலிருந்த 5 மாணவர்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
இதன்போது, சம்பவ இடத்தில் இருந்தவர்களால் ஒரு மாணவர் உடனடியாக உயிருடன் மீட்கப்பட்டார். ஏனைய நான்கு மாணவர்களும் கடுமையான நிலையில் மீட்கப்பட்டு, உடனடியாக வனத்தவில்லுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.