சென்னை:
வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ஒரே அடியாக 993 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதற்குக் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விலை உயர்வால் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை 3,237 ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும், இது சிறு மற்றும் குறு வணிகர்களால் எட்ட முடியாத உயரமாக மாறியுள்ளது என்றும் சாடியுள்ளார்.
மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழலைக் காரணம் காட்டி, கடந்த மூன்று மாதங்களாக எரிபொருள் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருவதாகக் குற்றம்சாட்டிய அவர், இதன் விளைவாக உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உணவுப் பொருட்களின் விலை 20 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது சாமானிய மக்களை மேலும் பாதிக்கும் என்றும், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படும் மத்திய அரசு, உழைக்கும் மக்கள் மீதான இந்தத் தாக்குதலை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் நலனை விட அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டணிக்கே மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதாக விமர்சித்துள்ள வீரபாண்டியன், உயர்த்தப்பட்ட சிலிண்டர் விலையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
#CPI #MVeerapandian #CylinderPriceHike #LPGPriceRise #CentralGovernment #Inflation #BusinessCrisis #SmallBusiness #TamilNaduPolitics #BreakingNews #PriceHike2026 #CommunistParty #Protest #FuelPrice #CommonManStruggle #May2 #ChennaiNews #EconomyImpact #LPGUpdate #AntiPeoplePolicies_