வட்டுவாகல் பழைய பாலத்தின் ஒரு பகுதி தமிழின அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

முல்லைத்தீவு – வட்டுவாகல் பழையபாலத்தின் ஒரு பகுதியாவது தமிழ் இன அழிப்பின் நினைவுச்சின்னமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கினைப்புக்குழுக்கூட்டம் 03.06.2026இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றபோது, பழைய வட்டுவாகல் பாலத்தின் ஒருபகுதி நினைவுச்சின்னமாக பேணிப் பாதுகாக்கப்படவேண்டுமெனக் கோரியிருந்தோம்.
குறிப்பாக எரித்து அழிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகம் நினைவுச்சின்னமாக பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த விடயத்திலும் அதேபோல தவறிழைப்பதற்கு இடமளிக்கமுடியாது என்பதையும் அதன்போது சுட்டிக்காட்டியிருந்தோம்.
இருப்பினும் வட்டுவாகல் பாலம் இடித்தழிப்புச் செய்கின்ற செயற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்புச் செயற்பாட்டின் நினைவுச்சின்னமாக வட்டுவாகல் பாலத்தின் ஒருபகுதியை விட்டுவைக்குமாறு மக்களாலும் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
எனவே வட்டுவாகல் பழைய பாலத்தின் ஒருபகுதி தமிழ் இனவழிப்பின் சாட்சியாக பேணிப்பாதுகாக்கப்படவேண்டும்.
இந்த விடயத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்கவும் கவனம் செலுத்தவேண்டும்.
இனவழிப்பின் சாட்சியமான பழைய வட்டுவாகல் பாலத்தின் ஒருபகுதியை பேணிப்ப பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.
மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் இந்தவிடயத்தில் கவனஞ் செலுத்தத் தவறினால் அவரும் சேர்ந்துதான் எமது தமிழ் இன அழிப்பின் சாட்சியத்தை அழிப்பதாக கருதவேண்டிவரும் – என்றார்.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க பதிலளிக்கையில்,
இது ஒரு மனிதாபிமானக் கோரிக்கையாகும். இருப்பினும் தொழில்நுட்ப ரீதியாக பழைய பாலத்தை உடைக்காமல் விடுவதற்கு வாய்ப்பிருக்கின்றதா என்பதை பரிசீலிக்கவேண்டும்.
குறித்த பழைய வட்டுவாகல் பாலத்தை உடைக்காமல் விடுவதால் நீரோட்டம் தடைப்படும் வாய்ப்புக்கள் இருக்கின்றதா என்பதுதொடர்பில் ஆராயவேண்டுமெனவுந் தெரிவித்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
நீரோட்டம் தடைப்படும் வகையில் பழையவட்டுவாகல் பாலத்தை விடுமாறு நாம் கோரவில்லை.
தொடக்கப்பகுதி அல்லது, முடிவிடத்தில் பாலப்குதியை நினைவுச்சின்னமாக விடுமாறே நாம் கோருகின்றோம்.
நிச்சயமாக வட்டுவாகல் பழையபாலத்தின் ஒரு பகுதி தமிழின அழிப்பின் நினைவுச்சின்னமாகப் பேணப்படவேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.
photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு