வடக்கு, கிழக்கு மக்களை பாதிக்கும் பணம் தூயதாக்கல் தடைச் சட்டம்!

பணம் தூயதாக்கல் தடை சட்டம், நிதிசார் கொடுக்கல் வாங்களை அறிக்கையிடல் சட்டம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய சட்டம் ஆகிய சட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிவில் அமைப்புகளையும் அந்த அமைப்புகள் மூலம் உதவிகளை பெறும் மக்களையுமே பாதிப்புள்ளாக்கும். இந்த சட்டங்களில் நெகிழ்ச்சித் தன்மையை கடைப்பிடிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம்,நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பணமோசடியையும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதையும் தடுப்பதன் அவசியத்தை எந்த உறுப்பினரும் மறுப்பதில்லை. எமது நாட்டின் நிதி அமைப்பின் நம்பகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதும், நிதி நடவடிக்கை பணிக்குழு நிர்ணயித்துள்ள தரநிலைகளுக்கு இணங்கச் செயற்படுவதும் இலங்கையின் சர்வதேசக் கடமையாகும். அவற்றை நடைமுறைப்படுத்தத் தவறினால், சர்வதேச நிதி அமைப்பில் இலங்கையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும், முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறையும், வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதற்கான செலவு அதிகரிக்கும், அதன் சுமையை இறுதியில் சுமப்பது எமது மக்களே. இன்று நாம் தீர்மானிக்க வேண்டிய கேள்வியானது நிதி நடவடிக்கை பணிக்குழுவின் தரநிலைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமா வேண்டாமா என்பதல்ல. அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.

ஒவ்வொரு சிவில் சமூக அமைப்பையும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதுமாறு அது கூறுகிறதா? இல்லை. அனைத்து சிவில் சமூக அமைப்புகளுக்கும் பொதுவான கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அது கூறுகிறதா? இல்லை. சட்டபூர்வமாக இயங்கும் அமைப்புகளை தொடர்ச்சியான கண்காணிப்புக்கும் தேவையற்ற தலையீட்டுக்கும் உட்படுத்துமாறு அது கூறுகிறதா? இல்லை. அப்படியானால் அது என்ன கூறுகிறது?

எவ்வாறாயினும் நடவடிக்கைகள் இலக்குவைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். நடவடிக்கைகள் விகிதாசாரமானதாக இருக்க வேண்டும். நடவடிக்கைகள் ஆபத்து மதிப்பீட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

இலங்கையில் நடைபெறுவது என்ன? குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் இயங்கும் சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகள், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற அமைப்புகள் தொடர்ச்சியான கண்காணிப்புக்கும் விசாரணைக்கும் உள்ளாக்கப்படுகின்றன. அவற்றின் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் செல்கின்றனர். மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கு அழைக்கப்படுகின்றனர்.

அங்குள்ள மக்கள் வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கே சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சட்டபூர்வமாக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதியையே பெறுவதற்கு எண்ணற்ற தடைகளைச் சந்திக்கின்றனர். இது ஏன்? அவர்கள் பணமோசடியில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டதாலா? இல்லை. அவர்கள் பயங்கரவாதத்திற்கு நிதியளித்ததாக ஆதாரங்கள் இருப்பதாலா? இல்லை. அப்படியானால் ஏன்? சந்தேகம் மட்டுமே காரணம்.

அரசாங்கத்தின் சொந்த ஆபத்து மதிப்பீடே இலாபநோக்கற்ற அமைப்புகளின் பயங்கரவாத நிதியளிப்பு ஆபத்து குறைவிலிருந்து மிதமானது என்று கூறுகிறது. அவ்வாறிருக்கஇ மனித உரிமைப் பணிகளில் ஈடுபடும் அமைப்புகள் எந்தப் புறநிலை ஆதாரமும் இன்றி தொடர்ந்து அதிகமான கண்காணிப்பிற்கும் சந்தேகத்திற்கும் உள்ளாக்கப்படுகின்றன. இது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்குமுறை அல்ல. இது சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்ட நிர்வாக மனப்பான்மையாகும். இது சட்டத்தின் ஆட்சியின் வெளிப்பாடு அல்ல. இது சந்தேகத்தின் ஆட்சிக்கான வழியைத் திறக்கிறது.அதன் விளைவுகள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்துவிட்டன.

சிவில் சமூக அமைப்புகளில் பெரும்பாலானவை வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றன. பல அமைப்புகளால் வங்கிக் கணக்குகளையே திறக்க முடியவில்லை. பல திட்டங்கள் தாமதமாகின்றன. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உருவாகிறது. மனிதாபிமான உதவித் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. சட்ட உதவிகள் தடைபடுகின்றன. மனநல ஆலோசனைச் சேவைகள் பாதிக்கப்படுகின்றன.

இதனால் பாதிக்கப்படுவது அந்த அமைப்புகள் அல்ல. அந்த அமைப்புகளை நம்பி வாழும் சாதாரண மக்கள்தான். வாழ்வாதார உதவிக்காகக் காத்திருக்கும் விதவை பாதிக்கப்படுகிறார். கல்வி உதவிக்காகக் காத்திருக்கும் மாணவன் பாதிக்கப்படுகிறான். சட்ட உதவியை எதிர்பார்க்கும் பாதிக்கப்பட்ட குடிமகன் பாதிக்கப்படுகிறார். மனிதாபிமான உதவியை எதிர்நோக்கும் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.

ஆகவே, இந்தச் சட்டமூலங்களின் தாக்கம் சிவில் சமூக அமைப்புகளோடு முடிவடையாது. இவை இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கக்கூடிய சட்டங்களாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. அதையே நான் இப்போது விளக்க விரும்புகின்றேன். இந்தச் சட்டமூலங்களின் உண்மையான தாக்கத்தை நாம் வெறும் சட்டப் பிரிவுகளின் மூலமாக மட்டும் மதிப்பிட முடியாது.

அவை சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பார்த்தால்தான் அவற்றின் உண்மையான விளைவுகளைப் புரிந்துகொள்ள முடியும். பெண் தலைமையிலான குடும்பங்களுக்கும் சிறு விவசாயிகளுக்கும் நுண்கடன் வழங்கும் ஒரு கிராமப்புற நிதி நிறுவனத்தை நினைத்துப் பாருங்கள். அவர்களிடம் முழுமையான ஆவணங்கள் இல்லாமலும் இருக்கலாம். அது அவர்கள் குற்றவாளிகள் என்பதற்காக அல்ல. வறுமை காரணமாக இருக்கலாம். இயற்கை அனர்த்தங்களால் ஆவணங்களை இழந்திருக்கலாம். பல ஆண்டுகால இடம்பெயர்வின் விளைவாக இருக்கலாம். ஆனால் சட்டத்தின் தேவைகள் தெளிவாக இல்லாத நிலையில், அந்த நிறுவனம் என்ன செய்யும்? கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வதைவிட, கடன் வழங்குவதைத் தவிர்க்கும். அதனால் பாதிக்கப்படுவது யார்? ஏழை விவசாயிகளும், பெண் தலைமையிலான குடும்பங்களும்தான்.

அடுத்ததாக ஒரு வங்கியில் இடம்பெற்றிருக்கக்கூடிய நிதி முறைகேட்டை அம்பலப்படுத்தும் இரகசிய ஆவணங்கள் ஒரு புலனாய்வு ஊடகவியலாளருக்குக் கிடைக்கின்றன. இந்தச் சட்டமூலங்களின் கீழ், அவர் அறியாமலேயே அவரது கணினியிலும் கைப்பேசியிலும் விசாரணை அதிகாரிகள் அணுகலைப் பெற முடியும். அவரது இரகசிய தகவல் வழங்குநரின் அடையாளம் வெளிப்படுத்தப்படலாம். அவருக்கு நீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை முன்வைக்கும் வாய்ப்புகூட வழங்கப்படாமல் இருக்கலாம். இதன் விளைவு என்ன? ஊழலை வெளிக்கொணர முன்வருவோர் இனி மௌனமாகிவிடுவார்கள். ஊடகச் சுதந்திரம் பலவீனப்படும். பொது பொறுப்புக்கூறல் பாதிக்கப்படும்.

இதனால் இந்தச் சட்டமூலங்களை மீளாய்வு செய்து, அவை நிதி நடவடிக்கை பணிக்குழு நிர்ணயித்துள்ள உண்மையான தரநிலைகளுக்கு அமைவாக இருப்பதையும் நீதித்துறையின் மேற்பார்வையை வலுப்படுத்துவதையும் இந்தப் பாராளுமன்றம் பாதுகாக்க வேண்டிய அரசியலமைப்பு உரிமைகளையும் ஜனநாயகச் சுதந்திரங்களையும் உறுதிப்படுத்துவதையும் இச்சபையிடம் நான் வலியுறுத்துகின்றேன் என்றார்.

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்

LNUXYUAULNCK7GSPUXGXBRCQKM

இது கவலையளிக்கிறது’: வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் ரொறன்ரோவிலுள்ள யூதர்களுக்குச் சொந்தமான 2 பேக்கரி கிளைகள் இலக்கு வைப்பு

July 27, 2026

பெருமளவிலான ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த (GTA) பல யூத தொழுகைக்கூடங்கள் (synagogues) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்

death

குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலம்

July 27, 2026

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

kava

காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

July 27, 2026

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார்

wate

இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 27, 2026

மொனராகலை- வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

aads

மன்னாரில் 43ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

July 27, 2026

நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983ஆம் ஆண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல்

an

விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் தொடர்பில் புதிய சட்டம்

July 27, 2026

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இலங்கையின் சட்டக்

hurm

ஹோர்முஸில் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் வெடிப்பு?

July 27, 2026

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கண்ணிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள்

Death-2

பாடசாலை மாணவி திடீர் மரணம்: பெற்றோர் சந்தேகம்

July 27, 2026

பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த