வடக்கு – கிழக்கில் பாதுகாப்புப் படைகளிடம் உள்ள நிலங்களை விரைவாக விடுவிக்க ஜனாதிபதி அனுர உத்தரவு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல் காலத்தில் பொறுப்பேற்கப்பட்டு, தற்போது பாதுகாப்புத் தேவைகளுக்கு மேலும் அவசியமில்லை என அடையாளம் காணப்பட்டுள்ள நிலங்களை விடுவித்து மீண்டும் ஒப்படைக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல் காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காகக் கையகப்படுத்தப்பட்ட தனியார் நிலங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களால் பயன்படுத்தப்பட்ட அரச நிலங்களைச் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் மீண்டும் ஒப்படைப்பதை விரைவுபடுத்துவது தொடர்பாக நேற்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை விடுத்தார்.

தேசிய பாதுகாப்பே முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, இராணுவ முகாம்கள் மற்றும் ஏனைய பாதுகாப்பு கட்டமைப்புகள் எங்கு தேவை என்பதைத் தீர்மானிப்பது முப்படைகள், பொலிஸார் மற்றும் ஏனைய தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரிகளின் பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டினார்.

இந்தத் தேவைகளின் அடிப்படையில், எந்தெந்த நிலங்களை விடுவிக்க முடியும், எவற்றை பாதுகாப்பு நோக்கங்களுக்காக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த இறுதித் தீர்மானத்தை எட்டுமாறு அவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

பாதுகாப்பு நோக்கங்களுக்கு அத்தியாவசியமான நிலத்தின் அளவைத் தீர்மானிக்கும்போது மக்கள் மைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறும், மக்களுக்குத் திரும்ப வழங்கக்கூடிய அதிகபட்ச நிலப்பரப்பை விடுவிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார். நிலங்களை மீண்டும் வழங்குவதுடன் மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளையும் வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதன்படி, அதிக உற்பத்தித் திறனை அடையக்கூடிய மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய நவீன விவசாய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு விவசாய, கால்நடை, நில மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி திசாநாயக்க பணிப்புரை வழங்கினார்.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்