நேற்று (08) லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இலங்கை பெண் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவிக்கையில், காயமடைந்த பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேலினால் 10 நிமிட இடைவெளியில் லெபனான் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான பாரிய தாக்குதல்களின் விளைவாக, இதுவரை 254 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 1,165 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் லெபனான் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்