ரிஷாட் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி தொடர்பில் வாக்குமூலம்

ழும்பு பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்குச் சொந்தமான வீடொன்றில் 2021 ஆம் ஆண்டில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷாலினி ஜூட் குமார் என்ற சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது.

கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் சுவசெரிய முதலுதவி அதிகாரி அஸலி உபேக்ஷா நேற்று சாட்சியமளித்தார்.

மேலதிக நீதவான் லிலான் வருசூவிதாரன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

“கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சிறுமியைத் தேடி அந்த வீட்டின் கராஜ் பகுதியினூடாக நுழைந்தேன். அங்கே படிகளில் சிறுமி ஒருவர் இருத்தப்பட்டிருந்தார். அவர் மீது படுக்கை விரிப்பு ஒன்று போர்த்தப்பட்டிருந்தது. அத்துடன், சிறுமியின் உடலில் ஆடைகள் இருக்கவில்லை.

அந்த நேரத்தில் எரியும் ஒரு வாசனை உணரப்பட்டது. அது, எரியும் போது தோலில் இருந்து வெளிவரும் வாசனையாகும். எனினும் அது எவ்வகையான வாசனை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியாது.

கழுத்து, நெஞ்சு, கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதை என்னால் அடையாளம் காண முடிந்தது. சிறுமி என்னிடம் தண்ணீர் கேட்டார். அதற்கு மேல் வேறு எதையும் அவர் என்னிடம் கூறவில்லை.

உடனடியாக சிறுமியை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்திருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிறுமி இறந்த பின்னரே பொலிஸார் என்னிடம் வாக்குமூலம் பெற்றனர்.

சுவசரிய அவசர சேவை தொலைபேசி இலக்கமான 119 க்கு இச்சம்பவம் தொடர்பாக கிடைத்த ஆரம்ப அழைப்புக்குப் பதிலளிக்கும் போது தீக்காயங்களுக்கு உள்ளானவர்களை உடனடியாகக் குளிப்பாட்டுவது உள்ளிட்ட அடிப்படை முதலுதவிகள் குறித்து அறிவுறுத்தினோம்.

இருந்த போதிலும், நாங்கள் அங்கே சென்றடையும் போது குறித்த தரப்பினரால் அவை பின்பற்றப்பட்டிருக்கவில்லை.

மேலும், இந்த வழக்கில் சாட்சியமளிப்பது தொடர்பில் பொலிஸார் எங்களுக்கு எந்தவிதமான முறையற்ற அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டில் எரிவாயு காரணமாக தீப்பற்றிய ஒருவர் வீட்டில் உள்ளதாக சுவசரிய சேவைக்கு ஆரம்ப அழைப்பின் மூலம் பெறப்பட்டதாக தெரிவித்து, அதே ஆண்டில் தான் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் குறுக்கு விசாரணைக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

சுவசரிய சேவைக்கு பொதுவாகக் கிடைக்கும் அனைத்து அழைப்பு விவரங்களும் பதிவு செய்யப்படுவதால், இச்சம்பவமும் அவ்வாறே அமைந்திருக்கும் எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

தீக்காயங்களை தவிர, எரிவாயு காரணமாக தீப்பற்றி காயமடைந்த நபர் ஒருவர் குறித்தும் இச்சம்பவம் தொடர்பான ஆரம்ப சுவசரிய அழைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என எதிர்த்தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ff

37வது நாளாகவும் கேப்பாப்பிலவில் இன்று போராட்டம்

July 30, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி,

B3OFFCNFTZJGJNSYZ7YOVN3PCU

துப்பாக்கியுடன் கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த நபருக்குச் சிறைத்தண்டனை

July 30, 2026

தடைசெய்யப்பட்ட கைத்துப்பாக்கியுடன் கனடாவிற்குள் இரகசியமாக நுழைந்ததை ஒப்புக்கொண்ட நபருக்கு இரண்டு மற்றும் அரை ஆண்டுகள் (2.5 ஆண்டுகள்) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக

EUUUVNQ56XLK2RW557P5JOJTXE

பெல்ஜியத்தில் கைதான கனடிய நேட்டோ (NATO) பெண் பயிற்சிப் பணியாளர்- சீனாவுக்காக உளவு பார்த்ததாகச் சந்தேகம்

July 30, 2026

பிரஸ்ஸல்ஸ் — உளவு பார்த்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கனடிய நேட்டோ பெண் பயிற்சிப் பணியாளர் சீனாவுக்காகப் பணியாற்றினார்

9_vck-thirumavalavan-demands-all-party-meeting-on-cauvery-issue-30-07-2026

காவிரி விவகாரம்: தமிழ்நாடு அரசு உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

July 30, 2026

சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள்

8

வடலூர் வள்ளலார் சர்வதேச மைய திட்டம் கைவிடப்பட்டது: சென்னை ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்!

July 30, 2026

சென்னை: கடலூர் மாவட்டம் வடலூரில் அமையவிருந்த பிரம்மாண்டமான வள்ளலார் சர்வதேச மையத் திட்டத்தைக் கைவிடுவதாக இந்து சமய அறநிலையத்துறை சென்னை

6

மேகதாது விவகாரத்தில் காங்கிரஸும் பிஜேபியும் கூட்டு சதி செய்கின்றனர் – அன்புமணி ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு!

July 30, 2026

மாமல்லபுரம்: மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸும், பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு எதிராகக் கூட்டு சதி செய்வதாகப்

5

டாஸ்மாக் முறைகேடு புகாரில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு: எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றுள்ள திடுக்கிடும் தகவல்கள்!

July 30, 2026

சென்னை: கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் டெண்டர் மற்றும் மதுபான கொள்முதல் உள்ளிட்ட பணிகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு

Pierre-OConnor

2006 ஆம் ஆண்டு கொலை வழக்கில் ரொறன்ரோ பொலிஸார் கைது நடவடிக்கை: மேலும் பல சந்தேக நபர்களைத் தேடும் பணி வீச்சு

July 30, 2026

கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால பழமையான கொலை வழக்கு ஒன்றில் ரொறன்ரோ (Toronto) பொலிஸார் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், இச்சம்பவத்துடன்

759803476_1058368157134427_418381261803682316_n

கல்வியே ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிகப் பெரிய முதலீடு.

July 30, 2026

யாழ்ப்பாணம், நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் 2025ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டத்தின் கீழ், மாகாணத்திற்காக

VTFAX2YXMVD7ZMPQN7QHXH2AFU

கல்கரி சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து அவசர எச்சரிக்கை அமைப்புகளில் சீர்திருத்தம் கோருகிறது ஒட்டிசம் நெட்வொர்க்

July 30, 2026

கல்கரியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனின் மரணத்தைத் தொடர்ந்து, காணாமல் போகும் பாதிக்கப்படக்கூடிய நிலைகளிலுள்ள மனிதர்களுக்கான அவசர எச்சரிக்கை அமைப்புகளில் (Emergency

4

கரூர் பணி நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்த விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

July 30, 2026

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை

default (41)

ஷம்பாலா (Shambhala) இசை விழாவில் மாயமான பெண், காணாமல் போவதற்கு முன் தனது சகோதரியைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளார்: குடும்பத்தினர் தகவல்

July 30, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவில் (B.C.) நடைபெற்ற ‘ஷம்பாலா’ இசை விழாவில் கலந்துகொண்டபோது காணாமல் போன ஒன்டாரியோவைச் சேர்ந்த பெண், தான் மாயமாவதற்கு