60 வயதுடைய தோல் புற்றுநோயாளி ஒருவருக்கு இத்தடுப்பூசி செலுத்தப்பட்ட 4 மாதங்களில், உடலிலிருந்த புற்றுநோய் பரவல்கள் முற்றாக மறைந்துள்ளதோடு புதிய கட்டிகள் எதுவும் உருவாகவில்லை என ரஷ்ய விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இதுவரை 6 பேருக்கு இத்தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் இதன் முழுமையான செயல்திறனை உறுதிப்படுத்த மேலதிக ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மருத்துவ உலகில் இதுவொரு மாபெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.