எங்கு நூல்கள் எரிக்கப்படுகின்றதோ அங்கு மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் — என்ற ஹெய்ன்ரிச் ஹைனேயின் எச்சரிக்கை வரிகளை நினைவுகூர்ந்து, இன்று Bebelplatz பகுதியில் யாழ்ப்பாண நூலக எரிப்பின் நினைவேந்தல் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.




நிகழ்வில் நினைவு தீபம் ஏற்றப்பட்டதுடன், 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட வரலாறு மற்றும் அதன் பண்பாட்டு இழப்புகளை விளக்கும் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலந்துகொண்டவர்கள் நூல்கள் எரிப்பு என்பது அறிவையும் மக்களின் அடையாளத்தையும் அழிக்கும் செயல் என்பதை வலியுறுத்தினர்.
இந்த நிகழ்வு, 1933 ஆம் ஆண்டு நாசி ஆட்சியினரால் நூல்கள் எரிக்கப்பட்ட இடமாக அறியப்படும் Bebelplatz இல் நடைபெற்றது. அங்கு அமைந்துள்ள “Empty Library” நினைவுச்சின்னம், புத்தக எரிப்பின் வரலாற்றை நினைவூட்டுகிறது