யாழ்.மத்திய கல்லூரிக்கு எதிரான வடக்கின் சமர்: வெற்றியை நோக்கிச் செல்லும் சென். ஜோன்ஸ்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு எதிரான 119ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் உதயனன் அபிஜோய்ஷாந்த் குவித்த அபார சதம், சென். ஜோன்ஸ் கல்லூரியை வெற்றியை நோக்கி நகரவைத்துள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இப் போட்டியில் 248 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடியில் 6 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று பெரும் இக்கட்டான நிலையில் இருக்கிறது.

இந் நிலையில் சென். ஜோன்ஸ் கல்லூரி தனது 41ஆவது வெற்றியைப் பதிவு செய்யும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 24 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த சென். ஜோன்ஸ் கல்லூரி இரண்டாம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை பூஜ்ஜியத்திலிருந்து தொடர்ந்தது.

சென். ஜோன்ஸ் கல்லூரியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அதன் முதல் 2 விக்கெட்கள் 19 ஓட்டங்களுக்கு சரிந்தன.

எனினும் உதயனன் அபிஜோய்ஷாந்த் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இரண்டு பெறுமதியான இணைப்பாட்டங்களை ஏற்படுத்தியதுடன் அபார சதம் ஒன்றையும் குவித்து சென். ஜோன்ஸ் அணியை பலமான நிலையில் இட்டார்.

ஜீவா அபிசானுடன் 3ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களையும் அணித் தலைவர் முர்பின் ரெண்டியோவுடன் 4ஆவது விக்கெட்டில் 88 ஓட்டங்களையும் அபிஜோய்ஷாந்த் பகிர்ந்தார்.

105 பந்துகளை எதிர்கொண்ட அபிஜோய்ஷாந்த் 15 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 121 ஓட்டங்களைக் குவித்தார்.

அபிசான் 18 ஓட்டங்களையும் முர்பின் ரெண்டியோ 34 ஓட்டங்களையும் சிவகுமார் ஜோன் நதேனியா 19 ஓட்டங்களையும் பெற்றனர்.

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களைக் கைப்பற்றிய முரளி திசோன் 2ஆவது இன்னிங்ஸில் 78 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களைக் கைப்பற்றி 10 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.

வெலன்டைன் ஹெரிஸ் 62 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஜெயசீலன் ஜெனோஷன் (20), கபிலன் அமலன் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 44 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

கபிலன் அமலன் 44 ஓட்டங்களைப் பெற்றார்.

முரளி திசோன் 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.

இன்று போட்டியின் கடைசி நாளாகும்.

எண்ணிக்கை சுருக்கம்

சென். ஜோன்ஸ் கல்லூரி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 119 (சற்குணராஜா வினுக்ஷன் 22, முர்பின் ரெண்டியோ 19, முரளி திசோன் 39 – 5 விக்., வெலன்டைன் ஹெரிஸ் 37 – 3 விக்.)

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 95 (அன்ரனிரேஷான் அபிஷேக் 23, நாகராசா சஜித் 16, கனேசமூர்த்தி கௌசிகன் 41 – 5 விக்., முர்பின் ரெண்டியோ 19 – 3 விக்.)

சென். ஜோன்ஸ் கல்லூரி 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 223 (உதயனன் அபிஜோய்ஷாந்த் 122, முர்பின் ரெண்டியோ 34, சிவகுமார் ஜோன் நதேனியா 19, ஜீவா அபிசான் 18, முரளி திசோன் 78 – 7 விக்., வெலன்டைன் ஹெரிஸ் 62 – 3 விக்.),

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 2ஆவது இன்: 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 120 – 6 விக். (கபிலன் அமலன் 44, முரளி திசோன் 22 ஆ.இ., ஜெயசீலன் ஜெனோஷன் 20, புவணேஸ்வரன் கிஷாந்த் 3 – 1 விக், உதயனன் அபிஜோய்ஷாந்த் 3 – 1 விக்.)

fsfsdf

கார்னி தலைமையிலான கட்சி இடைத்தேர்தலில் பெரும்பான்மை பெற 53% கனடியர்கள் விருப்பு

April 12, 2026

திங்கட்கிழமை நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கூட்டாட்சி லிபரல் கட்சி, பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான இடங்களை

sdfsfs

சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் அகழ்வு முயற்சி?

April 12, 2026

மட்டக்களப்பு, மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மொரட்டுவை பிரதேச

d

சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க லிபரல் கட்சி தீர்மானம்

April 12, 2026

கனடியர்கள் சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்துவதற்கான தகுதியுள்ள வயதை 16 ஆக நிர்ணயிப்பதற்கு ஆதரவாக ஃபெடரல் லிபரல் கட்சியினர் வாக்களித்துள்ளனர்.

womenArrest_1200px_22_11_21-1000x600-1

வௌிநாட்டு பெண் கட்டுநாயக்கவில் கைது

April 12, 2026

தமது உடலில் கொக்கெய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்து நாட்டுக்குள் கொண்டு வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், இன்று (12) கட்டுநாயக்க

heat wa

நாளை அதிக வெப்பம்!

April 12, 2026

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் நாளை (13) வெப்பச் சுட்டெண்

soc

சமூக ஊடகப் பாவனையில் கவனம்!

April 12, 2026

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

lo

பாலத்திலிருந்து லொறி வீழ்ந்து விபத்து: இருவர் பலி

April 12, 2026

வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பாலத்திலிருந்து லொறி ஒன்று கவிழ்ந்ததில், அதன் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய

death

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

April 12, 2026

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தாந்தாமலை பகுதியைச் சேர்ந்த 58

rajee

வரலாற்று ரீதியான தொடர்புகளையும் புதுப்பிக்க தலைமன்னார் – இராமேஸ்வரம் படகுச் சேவையை மீள ஆரம்பிக்குமாறு பிரேரணை

April 12, 2026

தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையிலான வரலாற்றுப் புகழ்மிக்க படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்கக் கோரும் விசேட பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில்

kad

யாழ்.நாகர்கோவில் கடற்பரப்பில் கடல் அட்டை பிடித்த 6 பேர் கைது!

April 12, 2026

யாழ்ப்பாணம் நாகர்கோவில் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர முக்குளிப்பில் (Diving) ஈடுபட்டு கடல் அட்டைகளைப் பிடித்த 6

arr

விசேட அதிரடிப்படை வீரர் உட்பட ஆறு பேர் கைது

April 12, 2026

மட்டக்களப்பு – கரடியனாறு பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் யூ மற்றும்

lak

சிங்கங்களாகத் திரியும் எதிர்க்கட்சியினர் பூனைக்குட்டிகளாக மாறிவிடுகின்றனர் – லக்மாலி ஹேமச்சந்திர

April 12, 2026

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்துக்கு வருகை தரும் போது, சிங்கங்களாகத் திரியும் எதிர்க்கட்சியினர் பூனைக்குட்டிகளாக மாறிவிடுகின்றனர் என்று தேசிய மக்கள்