யாழ். பல்கலைக்கழக வெசாக் கூடு சேதமாக்கல்: வதந்திகளை நம்ப வேண்டாம் என பீடாதிபதி வேண்டுகோள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்திற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்களே வெசாக் கூட்டினைச் சேதப்படுத்தியுள்ளனர் என்றும், இது குறித்து பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளையும் விசமப் பிரசாரங்களையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த மே மாதம் 30, 31 ஆம் திகதிகளில் பௌத்த மாணவர்களால் வெசாக் நிகழ்வுகளை நடத்துவதற்கு முறையாக அனுமதி கோரப்பட்டிருந்தது. சகல மதங்களுக்கும் சம மரியாதை அளிக்கும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகமும் இதற்கு அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, சனிக்கிழமை நிகழ்வுகள் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி அமைதியாக நிறைவடைந்தன.
ஞாயிற்றுக்கிழமை (மே 31) இரவு நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்த பின்னர், பின்னிரவு 10:50 மணியளவில் முகங்களைத் துணியால் மூடியபடி மதில் ஏறிப் பாய்ந்து உள்நுழைந்த அடையாளம் தெரியாத இருவர், பீடத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரங்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர். இதைக் கண்ட கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை நோக்கிச் சென்றபோது, அவர்கள் மீண்டும் மதில் பாய்ந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், நள்ளிரவு 12:50 மணியளவிலும் அவர்கள் மீண்டும் மதில் வழியே குதித்து உள்நுழைந்தபோது, பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கோப்பாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டு, அவர்கள் பீடத்திற்கு விரைந்து வந்து முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். மறுநாள், பல்கலைக்கழகத் துணைவேந்தரின் அறிவுறுத்தலின் பேரில் பதிவாளரினால் காவல் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அநாகரிகச் செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தீவிர விசாரணைகளைக் காவல் துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.
முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்கள் அனைவரும் எவ்வித பாகுபாடுமின்றி ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனுமே தமது கற்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்கலைக்கழகத்தின் சுமுகமான இயக்கத்தைக் குலைக்கவும், தமிழ் – சிங்கள மாணவர்களிடையே காணப்படும் புரிந்துணர்வையும் இன நல்லுறவையும் சீர்குலைக்கவும் திட்டமிட்டே வெளிநபர்களால் இந்தச் சதி முயற்சி மேற் கொள்ளப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மாணவர்கள் மத்தியில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்றும், வழமையான கல்வி நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ள பீடாதிபதி, சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளைப் புறக்கணிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
cham

சமிந்த விஜேசிறிக்கு பிணை

August 25, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள்

Parliame

22ஐ சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல்

August 25, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள்

can

மாணவியின் மனிதநேயப் பண்பு!

August 25, 2026

அக்கரப்பத்தனை பகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த 15,000 ரூபாய் பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனைத் தாமதிக்காமல்

dd

117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!

August 25, 2026

உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்