யாழில் இ.போ.சவின் சேவையை முடக்கி போராடுவோம்!

யாழில் இ.போ.சவின் இறைமையுள்ள நிலப்பரபில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத்தை நிர்வகிப்பது தொடர்பில் யாழ். மாநகர சபைக்கும் இ.போ.சவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள குழப்ப நிலை இன்று (28) பெரும் பிரச்சினையாக மாறியதால் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் சிலமணி நேரம் பெரும் பரபரபு ஏற்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

இன்று காலை யாழ். மாநகர சபையின் ஊழியர்கள் குறித்த மலசல கூடத்தொகுதிக்கு நீர் இணைப்பை வழங்கும் நோக்குடன் சென்றிருந்த நிலையில் அவர்கள் இ.போ. சபையினரால் தடுக்கப்பட்டதை அடுத்தே பிரச்சினை உருவானது.

முன்பதாக பல்வேறு தரப்பினரது கோரிக்கையின் அடிப்படையில்
கடந்த ஆட்சிக்காலத்தில் இ.போ.சவினால் இந்த பொது மலசலகூட கட்டட நிர்மாணத்துக்காக யாழ். ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் திட்ட மொழிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கென குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்ட இ.போ.சவின் ஆழுகைக்குட்பட்ட நிலப்பரப்பிலேயே இந்த மலசலகூடம் அமைக்கப்பட்டது.

அத்துடன் பொது மலசலகூடம் கட்டுவதற்கான அனுமதியையும் இ.போ.ச விடம் யாழ். மாநகரசபை கோரி பெற்றே இத்திட்டம் நிறைவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த 13 ஆம் திகதியன்று குறித்த மலசலகூட தொகுதியை குத்தகைக்கு விடுவதற்கான விண்ணப்பத்தை யாழ். மாநகரசபை பத்திரிகை மூலம் கோரியிருந்தது.

இது குறித்து குறித்த தரப்புக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
இதற்கு குறித்த நிலப்பரப்பை யாழ். பிரதேச செயலகம் தம்மிடம் பாரப்படுத்தியுள்ளதாக மாநகரசபை தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

எமக்குரிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த பொது மலசலகூடத்தை தன்னிச்சையாக நிர்வகிக்க மாநகரசபை முயன்றால் நாம் சேவையை முடக்கிப் போராடி எமக்கான நீதியைப் பெறுவோம் என்றனர்.

இதே நேரன் இவ்விடம் குறித்து யாழ் மானகரசபை உறுப்பினர்கள் கூறுகையில்,

நிலப்பரப்பு அரசுக்கு சொந்தமானது. இது ஒருவருக்கு என வரையறை செய்து கொடுக்கவில்லை. எனவே மக்களுக்கான சேவைக்காக இந்த கட்டட தொகுதியை மானகரசபை நிர்மாணித்தது.

கட்டுமாணம் நடைபெறும் வரை எந்த பிரச்சினையும் வரவில்லை. ஆனால் மக்கள் பாவனைக்காக திறந்துவிடும் போதுதான் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இ.போ.ச தொடர்ந்தும் இடையூறாக இருந்தால் பொலிஸாரின் உதவியுடன் சட்ட உதவியை நாடி நாம் இந்த கட்டடத்தை திறந்தே தீருவோம் என்றனர்.

litr

மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும் – லிட்ரோ

April 17, 2026

இலங்கையில் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும்

ve

தவிசாளர் வேலு யோகராஜின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை

Gamini

கத்தோலிக்க திருச்சபையினர் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் குறித்து திருப்தி!

April 17, 2026

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்ட வருவதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ

iran

கைதான இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

April 17, 2026

கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பிற்குள் கடந்த 9ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைதான

srines

இனப்பிரச்சினைக்கு பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது!

April 17, 2026

பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றார்கள், அப்படியல்ல. நிச்சயமாகப் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால்

kap

ஸ்ரீலங்கன் முன்னாள் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த

i

இலங்கை வருகிறார் இந்தியத் துணை குடியரசுத் தலைவர்

April 17, 2026

இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், 2026 ஏப்ரல் 19 முதல் 20 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வப் பயணம்

qr

நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை

April 17, 2026

நாளை (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

jail

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

April 17, 2026

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு

tv

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

April 17, 2026

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன

wat

நான்கு நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கிப் பலி!

April 17, 2026

கடந்த ஏப்ரல் 12 முதல் நேற்று (16) வரையிலான நான்கு நாட்களில் மட்டும், நீரில் மூழ்கி 20 பேர் துரதிர்ஷ்டவசமாக

jey

நிலக்கரி கொள்வனவு ஊழல் அழுத்தங்கள்; எரிசக்தி அமைச்சர் இராஜினாமா!

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தனது பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ