சென்னை
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய விளக்கம் தரவில்லை எனக் கூறி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துக் கடுமையாகப் பேட்டியளித்தார்.
“கேள்விக்குப் பதிலளிக்காமல் பழி போடுகிறார்கள்”:
மாணவர் படுகொலை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பாகத் திமுக சார்பில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது அரசுத் தரப்பில் உரிய பதில் அளிக்கப்படவில்லை. கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், எல்லாவற்றுக்கும் திமுக மீதே பழி சுமத்தி ஆளுங்கட்சியினர் வீணாகக் குற்றம் சாட்டுவதாக உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாகக் கூறினார்.
“சட்டம் ஒழுங்கு அமைச்சரையே காணவில்லை!”:
தொடர்ந்து பேசிய அவர், “தவெக அரசில் எந்த துறைக்கு யார் அமைச்சர்கள் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் அந்தந்த துறை சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் மழுப்புகின்றனர். முக்கியமாக, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்துப் பேச வேண்டிய துறை அமைச்சர்கூட இன்று சட்டசபைக்கு வரவில்லை,” என்று அவர் தவெக அமைச்சர்கள் மீது சரமாரியாகக் குற்றம் சாட்டினார்.
#UdhayanidhiStalin #DMK #TNAssembly #TVKGovernment #ChiefMinisterVijay #JosephVijay #ThalapathyVijay #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates