யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் ஈரான் கப்பலிலிருந்து மீட்கப்பட்டவர்களை அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரோஹித்த அபேகுணவர்த்தன

ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களை அரசாங்கம் யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், சர்வதேச சட்டத்துக்கமைய அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

ஈரானின் இரண்டாவது கப்பலை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஈரானின் இரண்டாவது கப்பலை பாதுகாத்து உயிர்களை பாதுகாப்பதற்கு எடுத்த நடவடிக்கைக்கு அரசாங்கத்துக்கு எமது கெளரவத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அரசாங்கம் செய்யும் நல்ல விடயங்களை நல்லது என தெரிவிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் கஞ்சப்பட போவதில்லை. கப்பலை பாதுகாக்க எடுத்த உறுதியான தீர்மானம், இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வே எடுத்திருக்கிறார். அவ்வாறான தீர்மானங்களை எடுப்பதற்கு முதுகெலும்பு இருக்கும் தலைவர் இருக்க வேண்டும்.

அதேநேரம் ஈரான் கப்பலில் இருந்தவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததுபாேன்று, யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபனியாது சர்வதேச சட்டங்களுக்கு அமைய அவர்களை அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்புவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைகும் நாங்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்போம்.

ஏனெனில் இந்த யுத்தத்தில் நாங்கள் யாருடைய பக்கத்தையும் எடுத்துக்கொள்ளாமல் நாங்கள் சுயாதீன நாடு என்பதை உலகுக்கு காட்ட வேண்டும். வல்லரச நாடுகளின் தலைவர்களுக்கு எப்போதும் பொறுமையும் செயற்படும் ஆற்றல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தான் நினைத்ததை செய்யும் போக்கு இருக்க முடியாது. கடலில் இருந்த ஈரான் கப்பலை தாக்காமல் அமெரிக்காவுக்கு அதனை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, கைப்பற்றி இருக்கலாம். அதுதான் வல்லரசு நாடுகளின் தலைவர்களின் நடவடிக்கையாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் இன்று எங்களுக்கு மனித உரிமை தொடர்பில் கற்றுத்தரும் இவர்கள்தான் அப்பாவி உயிர்களை போக்கி இருக்கிறார்கள். எமது நாட்டில் 2009ல் யுத்தம் முடிவடைந்து தற்போது 2026 ஆகியும் மனித உரிமை மீறியதாக எமது ராணுவ வீரர்களை தூக்கில் போடுவதற்கு முயற்சித்து வருகிறார்கள். மஹிந்த ராஜபக்ஷ்வை தேடுகிறார்கள். ஆனால் இன்று இவர்கள் காலை முதல் மாலை வரை அப்பாவி உயிர்களை கொன்று வருகிறார்கள். இதன்போது மனித உரிமை என ஒன்றும் பார்ப்பதில்லை.

அதனால் அரசாங்கம் இந்த யுத்தத்தின்போது யாருடைய பக்கமும் இருக்காமல் சர்வதேச சட்டத்திற்கமை செயற்பட்டு தைரியமாக தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.

Aru

மத்திய கிழக்கில் காயமடைந்த இலங்கையர்கள் நலமுடன் உள்ளார்கள்!

March 10, 2026

மத்திய கிழக்கில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களில் காயமடைந்த 4 இலங்கை பிரஜைகளும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதுடன், தற்போது அவர்கள் நலமுடன் இருப்பதாக

s

வெப்பமான காலநிலை குறித்து சிறுவர்களுக்கு எச்சரிக்கை!

March 10, 2026

நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration)

murder

நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே மோதல்: ஒருவர் வெட்டிப் படுகொலை

March 10, 2026

யாழ்ப்பாணம்- நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் பலியானார். குறித்த சம்பவம் நேற்று(9.3.2026) மாலை

isr

மனித உரிமைகள் கண்காணிப்பகம் இஸ்ரேல் குறித்து கடும் கண்டனம்

March 10, 2026

லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகள் மீது இஸ்ரேலிய இராணுவம் சட்டவிரோதமாக ‘வெள்ளை பொஸ்பரஸ் ‘ (White Phosphorus)

Saji

தேசிய சொத்துக்களை அரசாங்கம் பாதுகாக்கத் தவறிவிட்டது; இலங்கை மின்சார சபை குறித்து சஜித் பிரேமதாஸ

March 10, 2026

தேர்தலுக்கு முன்னர் தேசிய சொத்துக்களைப் பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றிய தற்போதைய அரசு, இன்று இலங்கை மின்சார சபையின் இறுதி

pet

அனைத்து எரிபொருட்களின் விலைகளையும் அதிகரித்தது

March 10, 2026

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று இரவு (9) பெட்ரோல் மற்றும் டீசல் உட்பட அனைத்து எரிபொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

in

ஈரானியக் கப்பலுக்கு அடைக்கலமளித்த இந்தியா

March 10, 2026

ஐக்கிய அமெரிக்க நீர்மூழ்கியொன்றால் டொர்பிடோ மூலம் தாக்கப்பட்ட மூன்று நாள்களுக்கு முன்னர் ஈரானிய போர்க்கப்பல் ஐரிஸ் டெனாவை துறைமுகத்துக்கு வர

sri

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய அதே கொடூரமான தாக்குதல்களுக்கு சமனானவையே இப்போது உலக அரங்கில் நிகழ்த்தப்படுகின்றன

March 10, 2026

சர்வதேச போர் விதிகளை மீறி ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய அதே கொடூரமான கொத்துக்குண்டுத் தாக்குதல்களை, இன்று ஈரான்

rohitha ab

யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் ஈரான் கப்பலிலிருந்து மீட்கப்பட்டவர்களை அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரோஹித்த அபேகுணவர்த்தன

March 10, 2026

ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களை அரசாங்கம் யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், சர்வதேச சட்டத்துக்கமைய அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை

bathra

இஸ்ரேலுக்கே எமது பூரண ஆதரவு; இலங்கை – அமெரிக்க ஒப்பந்தங்களை பகிரங்கப்படுத்துங்கள் – பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

March 10, 2026

இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கோ அல்லது அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ எவ்வித தெளிவும்

ceb

தீர்வில்லையெனில் பணிப்புறக்கணிப்பு; மின்சாரசபை சேவையாளர் சங்கம்

March 10, 2026

மின்சாரசபையின் சேவையாளர்களின் தொழில் காப்புறுதியை உறுதிப்படுத்தாமல் அரசாங்கம் மறுசீரமைப்பினை செயற்படுத்தி மின்சார சபையை சவப்பெட்டிக்குள் தள்ளியுள்ளது. நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள

gu

பெருந்தோட்ட அமைச்சின் செயலாளராக குணதாச சமரசிங்க நியமனம்

March 10, 2026

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராக குணதாச சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின்