சென்னை
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் 100 நாள் ஆட்சி மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்துத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
“இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா?”:
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “தவெக அரசு 100 நாட்களைக் கடந்துள்ளது, அவ்வளவுதான். மாற்றம் வரும் என்று சொன்னார்கள்; ஆனால், சட்டசபை நடைபெறாத கடந்த 4 நாட்களிலேயே அதிக பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் நடந்துள்ளன. இதுதான் நீங்கள் சொன்ன அந்த மாற்றமா? மாற்றம் வேண்டும் என்று ஓட்டுப் போட்ட இளைஞர்களின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாக உள்ளது,” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
சட்டசபை விவாதங்கள் மீது அதிருப்தி:
தொடர்ந்து பேசிய அவர், “கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்; அந்த குற்றவாளிகளுக்குக் கர்நாடக அரசு உச்சபட்ச தண்டனையை அளிக்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தில்தான் சட்டசபை நடந்து வருகிறது. ஆனால், சட்டசபைக்குள் தனிமனிதத் தாக்குதல்களும், ஒரு கட்சி மற்றொரு கட்சியிடம் வாக்குவாதம் செய்வதும்தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் பேச யாரும் தயாராக இல்லை,” என்று வேதனை தெரிவித்தார்.
“முழுப் பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்க”:
மேலும், “முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி என்பது யானைப் பசிக்குச் சோளப்பொறி போலத்தான் இருக்கிறது. விவசாயிகளின் நலன் கருதி முழுப் பயிர்க்கடனையும் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய முக்கியக் கோரிக்கையாகும்,” என்று பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
#PremalathaVijayakanth #DMDK #TVKGovernment #ChiefMinisterVijay #JosephVijay #ThalapathyVijay #CropLoanWaiver #TNAssembly #KarnatakaForestShooting #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates