முல்லை மத்திய பேருந்துநிலையத்தின் நிர்மாணப்பணிகளை விரைந்து முழுமைப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

நீண்டகாலமாக முழுமைப்படுத்தப்படாமல் காணப்படும் முல்லைத்தீவு பேருந்து மத்திய பேருந்து நிலையத்தின் கட்டுமானப்பணிகளை விரைவாக முழுமைப்படுத்தி, மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் கட்டுமானப்பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதியுடன் முழுமைப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் பதிலளித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 03.06 2026இன்று இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இவ்விடயம்தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகள் நீண்டகாலமாக தொடர்கின்றன.
ஏறத்தாள ஏழு வருடங்களாக இந்த முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் அறிகின்றோம்.
எனினும் இதுவரை குறித்த பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகள் முடிவுறுத்தப்படவில்லை.
எனவே முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகளை விரைவாக முடிவுறுத்தி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவேண்டும்.
எப்போது இந்தப் பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகள் முழுமையாக முடிவுறுத்தப்பட்டு, மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் இதன்போது பதிலளிக்கையில்,
குறித்த முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையம் அமைப்பதற்குரிய திட்டமிடல்கள் கடந்த 2017,2018,2019ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு குறித்த மத்திய பேருந்து நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அந்த பேருந்து நிலையத்தை அமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
தொடர்ந்து தற்போது முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலைதினை அமைப்பதற்குரிய நிதி ஒதுக்கிடுகள் செய்யப்பட்டு, கட்டுமானப்பணிகள் இடம்பெறுவருகின்றது.
அந்தவகையில் குறித்த பேருந்து நிலையத்தின் கட்டுமானப்பணிகள் எதிர்வரும் 14.08.2026ஆம் திகதியுடன் முழுமைப்படுத்தப்படுமென முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் இதன்போது பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
minister-sekar-babu

“முருகப்பெருமானே தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்!” – சேகர்பாபு எம்.எல்.ஏ.

August 25, 2026

சென்னை: அரசியலுக்கு ஆண்டவனைப் பயன்படுத்துவதில்லை சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு,

images - 2026-08-25T094725.133

பள்ளி, கல்லூரி கட்டடங்களில் இனி 3 வகையான ஸ்டிக்கர்: ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட்

images - 2026-08-25T094908.235

மகளிர் இலவச பயணத்திட்ட விரிவாக்கம்: பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி வரவேற்பு!

August 25, 2026

சென்னை: ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவாக்கம் தமிழகத்தில் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள மகளிர் கட்டணமில்லாப் பயணத்

images - 2026-08-25T093908.642

அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடவேண்டுமா? கொந்தளித்த ஆ.ராசா

August 25, 2026

சென்னை: அமைச்சரின் பேச்சும் ஆ.ராசாவின் விமர்சனமும் காருக்கு தேசியக்கொடி வந்துவிட்ட காரணத்தால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என

bharathiraja-rajmohan-2026-08-24-20-55-52

பாரதிராஜாவுக்குத் தேனியில் மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்புகள்!

August 25, 2026

சென்னை: ரூ.2.50 கோடியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும் எனத் தமிழ் வளர்ச்சி

dailythanthi_2026-08-24_146dsz5y_Anbil-mahesh copy

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

August 25, 2026

சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முடிவு முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக

kasthuri-1-2024-11-0308395fba104cc334646f143d18f661-4x3

இடைத்தேர்தலில் த.வெ.க. வென்றால் காங்கிரஸ் கூட்டணி முறிய வாய்ப்பு: பா.ஜ.க. நிர்வாகி கஸ்தூரி

August 25, 2026

கும்பகோணம்: கஸ்தூரியின் கோயில் தரிசனமும் செய்தியாளர் சந்திப்பும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகி கஸ்தூரி, அங்குள்ள

U2-1024x620

“தைரியம் இருந்தால் அந்த மூன்று கோப்புகளை ஓபன் பண்ணுங்க!” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி சவால்

August 25, 2026

சென்னை: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘போராளி ஓய்வதில்லை’ என்ற தலைப்பில் தி.மு.க.

1200-675-27473574-thumbnail-16x9-megamalai

மேகமலை விவகாரம்: தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு!

August 25, 2026

தேனி: ஆட்சியரின் உத்தரவும் மக்களின் அதிர்ச்சியும் தேனி மாவட்டம், வருஷநாடு, மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராம மக்களை வெளியேற்றும்

hindutamil-prod_2026-08-24_3sbtyc61_IMGTRBRAJAA210ED3RG16

“விஜய்யின் ஈகோவுக்காகவே பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து!” – டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்

August 25, 2026

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைத் த.வெ.க. அரசு கைவிட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சென்னை அண்ணா

Eb2zWUlU0AE67ID

சாத்தான்குளம் வழக்கு: தூக்குத் தண்டனை கைதிக்கு 2 நாள் அவசர கால விடுப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

August 25, 2026

மதுரை: ரகு கணேஷுக்கு அவசர கால விடுப்பு சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று சிறையில்

cham

சமிந்த விஜேசிறிக்கு பிணை

August 25, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள்