முல்லையில் வனஇலாக மற்றும் வனஜீவராசிகளின் பிடியிலுள்ள 17,469.58ஹெக்டயர் காணிகளை விடுவிக்க வியுறுத்திய – ரவிகரன் எம்.பி; மக்கள் மீது குண்டுகளைவீசிய கோட்டாவிடம் ஆவணங்களைக் கோருமாறும் தெரிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் கையகப்படுத்தலில் இருந்து விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58ஹெக்டயர் காணிகள், மக்களிடமிருந்து ஆவணங்கள் கோரப்படாமல் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு காணிகளுக்குரிய ஆவணங்களைக் கோருவதானால், யுத்தத்தை நடாத்தி மக்கள்மீது குண்டுகளைப்போட்டு, மக்களை அகதிகளாக ஓடச்செய்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜயபக்சவிடமும் அவர்களுடைய சகாக்களிடமும் ஆவணங்களைக் கோருமாறும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், யுத்தத்தினை நடாத்தியமைக்காக கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக வழக்கினைப் பதிவுசெய்யுமாறும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரிடமும் கேட்டுக்கொண்டார்.
முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 01.10.2026இன்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத்திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிப்பதுதொடர்பாக கடந்த 2023.02.17ஆம் திகதியன்று ஜனாதிபதி செயலகத்தின் சமூக விவகார பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோனின் தலைமையிலும், 2023.06.01ஆம் திகதி வனஜீவராசிகள் திணைக்களத்தின் மேலதிகசெயலாளர் சமந்தி ரணசிங்கவின் தலைமையிலும் கூட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
அந்தக்கூட்டங்களின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் காணிக்குரிய மேலதிகமாவட்ட செயலாளர், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆறு பிரதேசசெயலாளர்கள், குறித்த பகுதிகளுக்குரிய கிராம அலுவலர்கள் ஆகியோர் இணைந்து களவிஜயங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அந்தக் களவிஜயங்களுக்கு அமைவாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 3,013.96ஹெக்டயர் காணிகளும், புதுக்குடியிருப்பில் 5,131.13ஹெக்டயர் காணிகளும், ஓட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவில் 7,266.04ஹெக்டயர் காணிகளும், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 399.80ஹெக்டயர் காணிகளும், மாந்தை கிழக்கில் 1,231.37ஹெக்டயர் காணிகளும், மாணாலாறு பிரதேசத்தில் 427.28ஹெக்டயர் காணிகளும் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவரசிகள் திணைக்களங்களிடமிருந்து விடுவிக்கப்படவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தம் 17,469.58ஹெக்டயர் காணிகள் அதாவது ஏறத்தாள 43,149.86 ஏக்கர் காணிகள் ஆவணங்கள் கோரப்படாமல் வனவளத்திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களிடமிருந்து விடுவிக்கப்படுமெனத் தீர்மானிக்கப்பட்டது.
அவ்வாறு வனவளம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களின் கையகப்படுத்தலிலுள்ள, ஏற்கனவே விடுவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்ட காணிகளுக்கு தற்போது மக்களிடமிருந்து ஆவணங்களைக் கோருவது பொருத்தமற்ற செயற்பாடாகும்.
குறிப்பாக யுத்த நிலமைகளால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களிடம் இவ்வாறு காணி ஆவணங்களைக் கோரவே முடியாது.
இவ்வாறு யுத்த நிலைமைகள்மூலமும், இராணுவ நடவடிக்கைகள்மூலமும் வெளியேற்றப்பட்ட மக்களிடம் ஆவணங்கள் கோரப்படக்கூடாது.
அவ்வாறு ஆவணங்ஙள் கோருவதானால் அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்து யுத்தத்தை நடாத்தி மக்கள் மீது குண்டுகளைப் போட்டுஅப்போதைய பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்சவிடமும், யுத்தத்தை நடாத்தியவர்களிடமே ஆவணங்களை கோரவேண்டும்.
அல்லது இவ்வாறு மக்கள் மீது குண்டுகளை வீசி, அவர்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிப்புக்குள்ளாக்கி மக்களை ஆவணங்களின்றி அகதிகளாக ஓடச் செய்த கோட்டாபாய ராஜபக்சவிற்கு எதிராகவும், யுத்தத்தை நடாத்தியவர்களுக்கு எதிராகவும் வழக்குப் பதிவுசெய்யுமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத்திணைக்களத்திடமிருந்துமேலதிகமாக 3043.23ஹெக்டயர் காணிகளுக்குத்தான் அப்போது மக்களிடமிருந்து ஆவணங்கள் பெறப்படவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.அந்தக் காணிகளுக்கு ஆவணங்களை வழங்குவதைப்பற்ற பரிசீலிக்கமுடியும்.
இத்தகைய சூழலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேசசெயலாளர் பிரிவுகளிலுமிருந்து மொத்தம் 10,462.84ஹெக்டயர் நிலங்களை மேலதிகமாக தமக்குத் தருமாறு வனஇலாக தற்போது கோரியிருப்பதாக அறியமுடிகின்றது. ஒருபோதும் எம்மால் வனவளத் திணைக்களத்திற்கு எம்மால் காணிகளை வழங்க முடியாது.
அதேவேளை ஏற்கனவே வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 43,149.86 ஏக்கர் காணிகளுக்கும் மக்களிடமிருந்து ஆவணங்கள் கோரப்படாமல் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானமாக முன்மொழிகின்றேன் – என்றார்.
அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் முன்மொழியப்பட்ட குறித்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Mid photos new.00_00_07_17.Still116 - Copy

“தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமா குறித்து ஸ்டாலினின் பேச்சு!” – மு.க. ஸ்டாலினைக் கடுமையாகக் கண்டித்த முதலமைச்சர் விஜய்!

October 3, 2026

தாராபுரம்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் பி. சத்தியபாமா குறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

dailythanthi_2026-10-02_y3cdvf8w_18

“தாராபுரம் பிரச்சாரத்தில் மற்றவர்களின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் பேசியது கண்டிக்கத்தக்கது!” – சௌமியா அன்புமணி கடும் சாடல்!

October 3, 2026

தாராபுரம்: தாராபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் மற்றவர்களின் உடல்நிலை குறித்துப் பேசியமைக்கு பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி

ravi ka

முல்லையில் வனஇலாக மற்றும் வனஜீவராசிகளின் பிடியிலுள்ள 17,469.58ஹெக்டயர் காணிகளை விடுவிக்க வியுறுத்திய – ரவிகரன் எம்.பி; மக்கள் மீது குண்டுகளைவீசிய கோட்டாவிடம் ஆவணங்களைக் கோருமாறும் தெரிவிப்பு

October 3, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் கையகப்படுத்தலில் இருந்து விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58ஹெக்டயர் காணிகள், மக்களிடமிருந்து

thyity

தையிட்டி விகாரையை சூழ தனியார் காணியில் புதிய கட்டுமானங்கள்

October 3, 2026

தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியார் காணியில் மேலும் புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, அதனை நேரில் பார்வையிடச்

ol

பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை?

October 3, 2026

நுகர்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட பாம் எண்ணெய் (Palm Oil) இறக்குமதித் தடையை மீண்டும்

ele dea

மின்கம்பம் நடச் சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

October 3, 2026

கடவத்தை – மன்கட வீதி பகுதியில் உயர் அழுத்த மின்சார விநியோகத்தை துண்டிக்காமல் மின் கம்பமொன்றை சீரமைக்க முயன்ற நான்கு

Thileepan

தியாகதீபம் திலீபனின் சிலையை ஏற்க நீதவான் நீதிமன்றம் மறுப்பு!

October 3, 2026

நல்லூர் நினைவாலயத்தில் இருந்து காவற்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்ட தியாகதீபம் தி*லீபனின் திருவுருவச் சிலையை நீதிமன்றம் பொறுப்பேற்க மறுத்ததைத் தொடர்ந்து, அச்சிலையை

831036224_1818053859225569_307152235752109545_n

நினைவேந்தும் உரிமையை உறுதிப்படுத்துங்கள்..ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு 15 பொது அமைப்புக்கள் கூட்டாக மகஜர்.

October 3, 2026

தியாகதீபம் நினைவேந்தும் உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்க்கர் டுர்க்கிடம் 15 பொது அமைப்புக்கள் கையெழுத்திட்ட

835305667_2317527792401858_3220281225120066407_n

சிவராசா அனோஜனை விடுவிக்க அரச தலையீடு கோரி ஜனாதிபதியிடம் மகஜர்

October 3, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, ராமாஞ்ஞ மற்றும்

830513047_29564978313091031_2672284072323348658_n

யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

October 3, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய போக்குவரத்து நிலைமையை ஆய்வு செய்து, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தியை திட்டமிடுவது

PTAaa

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் சட்ட அமுலாக்கல் அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்குகின்றது – மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்

October 3, 2026

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் சட்ட அமுலாக்கல் அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்குகின்றது – மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள அரசை

2026-06-12T162655Z_1108486870_RC2B2KAIG5FQ_RTRMADP_3_IRAN-CRISIS-OIL-WORKAROUNDS

இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே தரித்து நிற்கும் ஈரானிய கப்பல்கள் – இலங்கைக்கு இராஜதந்திர கடல்சார் நெருக்கடி – அமெரிக்க ஊடகம்

October 3, 2026

ஈரானிற்கு திரும்பி செல்ல முடியாத நிலையில் அந்த நாட்டை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட எண்ணெய் கப்பல்கள் இலங்கையின் தென்மேற்கு கரையோரத்திற்கு