புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளரை பதவி விலகுமாறு கோரி, 26 புகையிரத தொழிற்சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் நேற்றுப் புதன்கிழமை (16) எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பிலுள்ள புகையிரத திணைக்களத்தின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.