மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு முக்கிய அழைப்பு

உள்கட்டமைப்பு, டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிய துறைகளில் முதலீடு செய்து மாலைதீவுடன் கைகோருங்கள் என மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு தெரிவித்தார்.

மாலைதீவு – இலங்கை வர்த்தக மன்றம், மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரின் பங்கேற்புடன் செவ்வாய்க்கிழமை (05) மாலை கொழும்பில் நடைபெற்றது.

மாலைதீவு பொருளாதார அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் வர்த்தக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பில் மாலைதீவு மற்றும் இலங்கையின் முன்னணி வர்த்தகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மாலைதீவு – இலங்கை வர்த்தக மன்றத்தில் உரையாற்றிய மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு,

அரை நூற்றாண்டுக்கும் மேலான இரு நாடுகளுக்கிடையிலான அரசியல் நம்பிக்கை, மக்களுக்கிடையிலான நெருங்கிய தொடர்பு மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட நட்புறவை, பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதே தமது எதிர்பார்ப்பு.

மாலைதீவு “முன்னேறிச் செல்லும் ஒரு தேசம்”. அபிவிருத்தியடைந்த, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான தேசமாக மாறுவதே தமது நாட்டின் இலக்கு. இந்த அபிவிருத்தி அணுகுமுறை மக்கள் மையப்படுத்தப்பட்ட, தொழில்நுட்பத்தால் பலப்படுத்தப்பட்ட மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது.

இலங்கை மாலைதீவின் அண்டை நாடு மட்டுமல்ல, மிக முக்கியமான மூலோபாய பங்காளியும் கூட என அவர் வலியுறுத்தினார். மாலைதீவு வர்த்தகர்கள் இலங்கையில் தமது முதலீடுகளை விரிவாக்க ஆர்வமாக உள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு முதலீடுகள் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கியம்.

இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தைத் தாங்கும் திறன் மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றில் இலங்கையின் அனுபவமும் திறமையும் மாலைதீவின் எதிர்காலப் பயணத்திற்குப் பெரும் பலமாக அமையும்.

இந்து சமுத்திரத்தில் மாலைதீவுகள் ஒரு வளர்ந்து வரும் டிஜிட்டல் மையமாகத் திகழ்கிறது, இது தனது நாட்டின் மீது சர்வதேச நிறுவனங்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். உள்கட்டமைப்பு, டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் முதலீடு செய்து மாலைதீவுடன் கைகோர்க்குமாறு இலங்கை வர்த்தக சமூகத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவை நவீன பொருளாதாரப் பங்களிப்பாக மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையைப் பாதித்த ‘டித்வா’ சூறாவளி மற்றும் உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், இலங்கை வரலாற்றில் அதிகூடிய வருடாந்த சுற்றுலாப் வருகையை 2025 இல் பதிவு செய்துள்ளதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்காக மாலைதீவு அரசாங்கமும் வர்த்தக சமூகமும் வழங்கிய 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி, இரு நாடுகளுக்கும் இடையிலான அசைக்க முடியாத நட்பிற்குச் சிறந்த உதாரணம் என அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

2025 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பரிமாற்றம் 137 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த போதிலும், அது உண்மையான திறனை விட மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். மாலைதீவின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை உட்பட பல்வேறு துறைகளில் 20,000 க்கும் மேற்பட்ட இலங்கை தொழில் வல்லுநர்கள் தற்போது பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். உணவு உற்பத்தி மற்றும் மீன் பதப்படுத்துதல் ஆகிய துறைகள் ஊடாக வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

மேலும், 2030 ஆம் ஆண்டளவில் 15 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை பயணித்துக் கொண்டிருப்பதாகவும், தெற்காசியாவின் பிரதான நிதி மையமான கொழும்பு துறைமுக நகரத்திற்குள் மாலைதீவு முதலீட்டாளர்களுக்குச் சிறந்த வாய்ப்புகள் காணப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். நிலையான ‘நீலப் பொருளாதாரம்’ திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் போன்ற கூட்டாண்மைகள் மூலம் இரு நாட்டு மக்களுக்கும் செழிப்பை ஏற்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மாலைதீவு பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் மொஹமட் சயீத் உரையாற்றுகையில், மாலைதீவு வெறும் சுற்றுலாத் தலமாக மட்டுமன்றி, பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். டிஜிட்டல் சேவைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிதிச் சேவைகள் மூலம் வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், இந்து சமுத்திரத்தில் வர்த்தகம், மூலதனம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு மூலோபாய மையமாக மாலைதீவை நிலைநிறுத்துவதே மாலைதீவு அரசாங்கத்தின் அபிலாசை என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய விநியோகச் சங்கிலி மறுசீரமைப்பு, டிஜிட்டல் மாற்றம், நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கும் திறன் ஆகிய விடயங்களில் இரு நாடுகளும் மூலோபாய ரீதியாக இணைந்து பணியாற்றுவதற்குப் பாரிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், குறிப்பாக டிஜிட்டல் சேவைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிதிச் சேவைகள் ஆகிய துறைகளின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தி, மிகவும் ஆற்றல்மிக்க மற்றும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பொருளாதாரக் கூட்டாண்மையைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் வர்த்தக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் இரு நாடுகளையும் சேர்ந்த தூதுக்குழுவினர், வர்த்தகப் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்