மஹிந்தவின் மகன் யோஷித ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (17) காலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு (Summons) இணங்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் இன்று காலை அவர் முன்னிலையாகியிருந்தார். இதனைத் தொடர்ந்தே அவர் உத்தியோகபூர்வமாகக் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த விசாரணைக்காக நேற்று (16) ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு யோஷித ராஜபக்சவுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நீதிமன்ற வழக்கு ஒன்றில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால் நேற்றைய தினம் சமூகமளிக்க முடியாது என அவர் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார். இதனையடுத்து, இன்றைய தினம் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட உத்தரவின் பேரில் வருகை தந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன?

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின்படி, யோஷித ராஜபக்சவுக்கு எதிராகப் பிரதானமாக இரண்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன:

  • கடற்படை ஆட்சேர்ப்புக்கான அடிப்படைத் தகைமை மோசடி: இலங்கை கடற்படையில் கெடட் அதிகாரியாக (Cadet Officer) இணைந்துகொள்வதற்கான நிலையான தகைமையாக, உயர்தரப் பரீட்சையில் (A/L) விஞ்ஞானம் அல்லது கணிதப் பிரிவில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பதே விதியாகும். எனினும், யோஷித ராஜபக்ச உயர்தரத்தில் கலைப்பிரிவிலேயே (Arts Stream) கல்வி கற்றுள்ளார். இதனால், கடற்படை பதவிக்குத் தேவையான ஆரம்ப அடிப்படைத் தகைமைகளை அவர் கொண்டிருக்கவில்லை என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

  • பிரித்தானிய அரச கடற்படை அகாடமி நிதி முறைகேடு: கடந்த 2006 செப்டெம்பர் மாதத்தில், அன்றைய கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, பிரித்தானிய அரச கடற்படை அகாடமிக்கு (British Royal Naval Academy) யோஷித ராஜபக்சவை அங்கு இணைத்துக்கொள்ள முடியுமா என வினவி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதற்கு அகாடமி சம்மதம் தெரிவித்த போதிலும், முழுமையான கல்விப்புலமைப் பரிசில் (Full Scholarship) அடிப்படையில் இதனை வழங்க முடியாது என்றும், இதற்கான கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த வெளிநாட்டுப் பயிற்சிக்கான நிதியுதவிகள் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்ட விதம் தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது.

726717948_1315682237340097_3613316531790611472_n

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

June 19, 2026

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தடை விதித்து கட்டளையிட்டுள்ளது

court-judge-hammer-gavel-696x398

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் கிருஷாந்திக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்த டாக்டர் அர்ச்சுனா! வீடியோக்களை உடனே தூக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

June 19, 2026

ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று கடுமையான சாட்டையடி

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

725147385_963435430006083_3681308214476639100_n

அரச படைகளுக்கு கணி வழங்க முயற்சி – எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் குரலை ஒடுக்க அழைக்கப்பட்ட பொலிசார் – யாழ் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பரபரப்பு!

June 19, 2026

அரச படையினருக்கு காணி வழங்க யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டதால் ஏற்பட்ட பெரும் குழப்பத்தைத் தடுக்க

acci main

கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் வீதி விபத்துகளால் 1,297 பேர் பலி

June 19, 2026

2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்

d

36வது தியாகிகள் தின நினைவேந்தல்!

June 19, 2026

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 36வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை

chemmani

செம்மணி புதைகுழியில் 387 என்புக்கூடுகள் நேற்று வரை அடையாளம்

June 19, 2026

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று 18ஆம் திகதி வியாழக்கிழமை ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து

us

அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை திடீர் இரத்து

June 19, 2026

பிராந்தியத்தில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட உடன்படிக்கையைச் செயல்படுத்துவது தொடர்பாக, சுவிட்சர்லாந்தின்

Cont

புதிய இறக்குமதி ஒழுங்குமுறை – வௌியானது வர்த்தமானி

June 19, 2026

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி

ca

உலக கிண்ண கால்பந்தாட்டம்; கனடா ஆதிக்கம்

June 19, 2026

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ‘பி’ பிரிவு போட்டியில், கட்டார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா

727322968_2861356607530672_2715840258650210241_n

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land and Trust-Building Engagement) செயற்றிட்டம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வரப்பிரசாதம்-ஆளுநர் நா.வேதநாயகன்

June 19, 2026

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land