மனைவியை பயன்படுத்தி தன்னை மிரட்டுவதாக இம்ரான் கான் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கான், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மனைவியை அதிகாரிகள் ஈவிரக்கமின்றி கொடுமைப்படுத்துவதாகவும், அவரைப் பயன்படுத்தி தன்னை மிரட்டுவதாகவும் மிகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஏற்கெனவே, சிறையில் கண்பார்வை வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் இம்ரான் கான், தற்போது மேலும் இன்னலுக்குள்ளாகியுள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த 2023ஆம் ஆண்டு ஒகஸ்ட் 5ஆம் திகதி முதல் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஈத் – ரமழான் பண்டிகையையொட்டி சிறையில் இருந்து தனது மகன் காசிம் கானுடன் தொலைபேசியில் பேசிய இம்ரான் கான், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான தகவல்களை அவரது மகன் காசிம் கான் தற்போது பொதுவெளியில் பகிர்ந்துள்ளார்.

“இந்த நாட்டின் நீதிபதிகள் தங்களை நினைத்து வெட்கப்பட வேண்டும். நாங்கள் நியாயம் கேட்டு பலமுறை நீதிமன்றத்தை நாடியும் எந்த பலனும் இல்லை. அவர்கள் சுயலாபத்திற்காக தங்கள் ஆன்மாவை விற்று விட்டனர். என்னை மனதளவில் உடைக்க முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால் எனது மனைவி புஷ்ரா பீபியை குறிவைக்கிறார்கள். என்னை மிரட்டுவதற்காகவே, எனது மனைவியை அவர்கள் மனிதநேயமற்ற முறையில் நடத்துகிறார்கள்” என்று இம்ரான் கான் கடுமையாக சாடியுள்ளார்.

அரசு பரிசுகளை முறைகேடாக விற்றது மற்றும் அறக்கட்டளை தொடர்பான ஊழல் வழக்குகளில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகிய இருவருக்கும் கடந்த 2024 டிசெம்பர் மாதம் புதிய சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் முதல் அடியலா சிறையில் உள்ள புஷ்ரா பீபி, கடுமையான தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வாரத்திற்கு 30 நிமிடங்கள் மட்டுமே தன்னை சந்திக்க அவருக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும், பல நேரங்களில் அதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் இம்ரான் கான் வேதனை தெரிவித்துள்ளார்.

தற்போது சிறையில் உள்ள இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீத பார்வை பறிபோய்விட்டதாக அவரது சட்டக் குழுவினர் சமீபத்தில் தெரிவித்தனர். இதற்காக அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் அவருக்கு 3வது முறையாக கண்ணில் ஊசி செலுத்தப்பட்டது. இதன்பின்னர் அவர் மீண்டும் அடியலா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பார்வை இழப்பு மற்றும் சிறை கொடுமைகளால் தவிக்கும் இம்ரான் கானுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை உடனடியாக வழங்கவும், அவரை அடிப்படை மனித உரிமைகளுடன் கண்ணியமாக நடத்தவும் வலியுறுத்தி இந்திய அணி வீரர்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ் உள்ளிட்ட 14 முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிற்கு கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்

Toronto-Election-1536x783

டொரன்டோ மேயர் தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில், வெறும் வாக்குறுதிகளைத் தாண்டி மேலதிகமானவற்றை எதிர்பார்க்கும் ஸ்கார்பரோ (Scarborough

October 12, 2026

டொரன்டோ மேயர் தேர்தலில் ஸ்கார்பரோ பகுதி ஒரு முக்கிய போர்க்களமாக உருவெடுத்து வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில்,

toronto mayor election

அக்டோபர் 26-ஐ முன்னிட்டு முக்கிய பிரச்சினைகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் உள்ளூர் அமைப்புகள்

October 12, 2026

வரவிருக்கும் நகராட்சித் தேர்தலில் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. நீங்கள் வேட்பாளர்கள் மற்றும் முன்னணியில் உள்ள பிரச்சினைகள் பற்றி மேலும்

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த