மத்திய கிழக்குப் போர்ச் சூழல்; எண்ணெய் விநியோகத்தில் வரலாறு காணாத சரிவு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் மற்றும் பதற்றமான சூழல்களைக் கருத்திற்கொண்டு, சர்வதேச எரிசக்தி முகமை (IEA) உலகளாவிய எண்ணெய் தேவை மற்றும் விநியோகம் குறித்த தனது முன்னறிவிப்புகளில் பாரிய குறைப்புகளை மேற்கொண்டுள்ளது.

எண்ணெய் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் விலை உயர்வு தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக, நுகர்வோர் தேவையில் நிரந்தர வீழ்ச்சி ஏற்படும் ‘தேவை அழிவு’ (Demand destruction) நிலை மேலும் பரவும் என பாரிஸை தளமாகக் கொண்ட இந்த சர்வதேச கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

2026 ஆம் ஆண்டில் உலகளாவிய எண்ணெய் தேவை நாளொன்றுக்கு 80,000 பீப்பாய்கள் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் கணிக்கப்பட்ட 640,000 பீப்பாய்கள் அதிகரிப்பு என்ற கணிப்புக்கு முற்றிலும் மாறான பாரிய வீழ்ச்சியாகும்.

இந்த ஆண்டு எண்ணெய் விநியோகம் நாளொன்றுக்கு 1.5 மில்லியன் பீப்பாய்கள் குறையும் என IEA எதிர்பார்க்கிறது.

கடந்த மாதம் இது 1.1 மில்லியன் பீப்பாய்கள் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. இது கோவிட்-19 காலப்பகுதிக்கு பிந்தைய மிகப்பெரிய விநியோகக் குறைப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் எண்ணெய் விலையானது அதன் வரலாற்றிலேயே மிகப்பெரிய மாதாந்த உயர்வைச் சந்தித்தது. இதனை “வரலாற்றிலேயே மிகக் கடுமையான எண்ணெய் விநியோக அதிர்ச்சி” என IEA வர்ணித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகள் மற்றும் போர்ச் சூழலே இந்தத் திடீர் மாற்றங்களுக்குப் பிரதான காரணமாகக் கூறப்படுகின்றது.

i

இலங்கை வருகிறார் இந்தியத் துணை குடியரசுத் தலைவர்

April 17, 2026

இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், 2026 ஏப்ரல் 19 முதல் 20 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வப் பயணம்

qr

நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை

April 17, 2026

நாளை (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

jail

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

April 17, 2026

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு

tv

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

April 17, 2026

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன

wat

நான்கு நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கிப் பலி!

April 17, 2026

கடந்த ஏப்ரல் 12 முதல் நேற்று (16) வரையிலான நான்கு நாட்களில் மட்டும், நீரில் மூழ்கி 20 பேர் துரதிர்ஷ்டவசமாக

jey

நிலக்கரி கொள்வனவு ஊழல் அழுத்தங்கள்; எரிசக்தி அமைச்சர் இராஜினாமா!

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தனது பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ

sr air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதான அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின்

chac

லங்கா நிலக்கரி நிறுவனத்தின் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதியால் விசேட ஆணைக்குழு

April 17, 2026

அரசுக்குச் சொந்தமான லங்கா நிலக்கரி நிறுவனம் (Pvt) Ltd அல்லது அதன் பின்வந்த நிறுவனங்களில், நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார

up

15 வயது மாணவி சடலமாக மீட்பு

April 17, 2026

செ.தி. பெருமாள் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் குதித்து, 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இன்று மதியம்

im

சீர்திருத்த வேகத்தைத் தக்கவைக்க இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தல்

April 17, 2026

உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் தளம்பல் நிலைகளால் இலங்கை மீண்டும் அபாயங்களை எதிர்கொண்டுள்ளதால், தனது சீர்திருத்த வேலைத்திட்டங்களில் உறுதியாக இருக்குமாறு

ssdfes

அம்பேத்கரின் சிந்தனைகளை யாராலும் தகர்க்க முடியாது – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

April 17, 2026

சாதி ஒழிப்புக்கு கல்வியை தவிர வேறு ஆயுதம் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். மதுரை

kush

நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது – குஷ்பு

April 17, 2026

“இந்​தத் தேர்​தலில் திமுக-வுக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம் காத்​திருக்​கிறது. இது முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் திமுக-​வில் உள்ள அனை​வ​ருக்​கும் நன்​றாக தெரி​யும்”