மட்டக்களப்பு அசம்பாவிதங்களில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் ஆஜராகக்கூடாது; கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தினை பரபரப்பாக்கியுள்ள கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் ஆஜராகக்கூடாது என்பதை வலியுறுத்தியும், குறித்த சம்பவம் தொடர்பில் 24 மணிநேரத்தில் சந்தேக நபர்களை கைதுசெய்த பொலிஸாருக்கு நன்றி தெரிவித்தும் இன்று புதன்கிழமை (01) மட்டக்களப்பு நகரில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பில் நடைபெற்ற இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்கும் வகையில் இவ்வாறான சம்பங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான கடும் தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் இளைஞர் யுவதிகள் ஊர்வலமாக திருமலை வீதியுடாக சென்று மட்டக்களப்பு பொலிஸ் சுற்றுவட்டம் ஊடாக மீண்டும் காந்திபூங்கா வந்து அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அமைதியான முறையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கறுப்பு உடைகள் அணிந்த நிலையில் கறுப்பு துணிகளை அடையாளமாக அணிந்துகொண்டு தமது போராட்டங்களை முன்னெடுத்தனர்.

பிணங்கள் வீசப்பட்ட கிணறு எமது நீதியின் சாட்சியாகட்டும்,நீதிவெல்லட்டும், அநீதி வீழட்டும் குற்றவாளிக்கு ஆதரவான எந்தவொரு முயற்சிக்கும் இடமளிக்கமாட்டோம், நீதியை சாகடிக்காதே எந்த சட்டத்தரணியும் குற்றவாளியை தொடாதே, குற்றம் புரிந்தவர்களை பாதுகாக்கமுனையும் எந்தசெயற்பாடுகளையும் அனுமதிக்கமாட்டோம் போன்ற பல்வேறு கோசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பில் நடைபெற்ற கொலை,கொள்ளை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களுக்கு சார்பாக எந்த சட்டத்தரணியும் ஆஜராககூடாது என வலியுறுத்தியுள்ள இளைஞர் யுவதிகள் குறித்த குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு களங்கத்தினை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் 24 மணி நேரத்தில் விசாரணை முன்னெடுத்து குற்றவாளிகளை கைதுசெய்த கிழக்கு மாகாண பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் அதன் உத்தியோகத்தர்களுக்கு நன்றியும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் தமது போராட்டம் பாரியளவில் வேறுவகையில் நடைபெறும் எனவும் இதன்போது எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

fue

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு

April 23, 2026

இந்த வருடம், ஜூலை மாதம் இறுதி வரை தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யும் அளவுக்கு எரிபொருள் கையிருப்பு உள்ளதாக புதிய

he

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

April 23, 2026

உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் பிற காரணங்களினால் சுவாச நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

hur

அமெரிக்காவின் முற்றுகையை மீறி வெளியேறிய 34 ஈரான் கப்பல்கள்

April 23, 2026

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ள போதிலும் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல், அதன் கட்டுப்பாட்டை மீறி, 34 ஈரான் கப்பல்கள் எல்லை தாண்டிச்

rob

வட தமிழக தேர்தல் களத்தில் ரொபோக்கள்

April 23, 2026

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய அம்சங்களை நடைமுறைப்படுத்தி இளம் வாக்காளர்களை கவர்ந்து

is

தீர்க்கப்படக்கூடிய சில சிறிய எல்லைப் பிரச்சினைகளே லெபனானுடன் எங்களுக்கு உள்ளன

April 23, 2026

அமெரிக்காவில் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகள் இன்று (23) நடைபெறும் சூழலில், இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியான்

HYP_5830941_img_20260423_130454_watermark_23042026_131629_2 copy

பெரும்பத்து கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு: தனி ஒருவளாக வந்து வாக்கு செலுத்திய சீலா!

April 23, 2026

திருநெல்வேலி, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் வேளையில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் ஒரு கிராமமே

alla

அல்லைப்பிட்டியில் சிறுவன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவம் ; சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

April 23, 2026

அல்லைப்பிட்டியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை

death

மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

April 23, 2026

நுராதபுரம் – அசரிக்கம பகுதியில் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் நேற்று (22) மாலை உயிரிழந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம்

bimal

வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்ற தமிழர் விரோத அரசல்ல நாம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

April 23, 2026

தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு

13year

13 வயது சிறுவனை காணவில்லை

April 23, 2026

கம்பஹா – பஹல இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிதுல நிம்சத் எனும் சிறுவன் நேற்று (22) முதல்

la

மே மாத இறுதியில் இருந்து புதிய வாகனங்களுக்கான தரப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகள்

April 23, 2026

புதிய வாகனங்களுக்கான தரப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் மே மாத இறுதியில் இருந்து வழங்க முடியும் என மோட்டார்

har

நிதி அமைச்சிலிருந்து அபகரிக்கப்பட்ட நிதியை மீளப் பெற முயற்சி

April 23, 2026

சைபர் குற்றவாளிகளால் நிதி அமைச்சிலிருந்து அபகரிக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில், முடிந்தவரை பெருமளவான தொகையை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக