மட்டக்களப்புச் சிறுவன் உலக சாதனை

உலகில் மிக வேகமாக எழுதக்கூடிய குழந்தை என்ற கௌரவத்தைப் பெற்று, மட்டக்களப்பைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுவன் அப்டியல் ரயன் விக்டர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வின் டொனால்ட் விக்டர் மற்றும் கிறிஸ்டின் ஷிரோமினி விக்டர் தம்பதியினரின் மகனான இவர், தனது மூன்று வயதிலேயே தாயின் வழிகாட்டலில் வாசிக்கும் மற்றும் எழுதும் ஆற்றலை பெற்றுள்ளார். ரயனின் அசுர வேக எழுத்தாற்றலை கவனித்த அவரது பெற்றோர், இதனை உலக சாதனையாக பதிவு செய்ய முன்வந்தனர்.

இதையடுத்து, மட்டக்களப்பு இருதயபுரத்தில் உள்ள திரு இருதயநாதர் மண்டபத்தில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் மேற்பார்வையில் இதற்கான சாதனை முயற்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை கிளையின் துணைச் செயலாளர் கதிரவன் த. இன்பராசா, மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் சிவ வரதகரன் உள்ளிட்ட அதிகாரிகள் நடுவர்களாக கலந்துகொண்டனர்.

இந்த முயற்சியின் போது, 3 மற்றும் 4 எழுத்துகளைக் கொண்ட 200 ஆங்கிலச் சொற்களை வெறும் 8 நிமிடங்களில் எழுதி அப்டியல் ரயன் விக்டர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனை உத்தியோகபூர்வமாக ஆய்வு செய்த நடுவர் குழு, புதிய உலக சாதனையாக அங்கீகரித்தது.

சாதனை படைத்த சிறுவனுக்குச் சான்றிதழ், நினைவு கேடயம், பதக்கம் மற்றும் அடையாளச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக தாண்டவன்வெளி புனித காணிக்கை அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை ரி.ஏ. யூலியன் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பிரதி அதிபர் அருட்தந்தை மெருஷன் ஹென்ரிக் மற்றும் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் பா. செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவனை வாழ்த்திச் சிறப்புரையாற்றினர்.

மேலும், கௌரவ விருந்தினர்களாக புதுவையூர் பு. தியாகதாஸ், ‘சின்னஞ்சிறு கல்விமான்கள்’ பாலர் பாடசாலை தலைமை ஆசிரியை ஜெ.எம். வலயட் மற்றும் ‘Jez Reel Kids Garden International College’ நிர்வாகப் பணிப்பாளர் பி.என். ஸ்டான்லி உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

Blac

சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலையில் பறக்கவிடப்பட்ட கறுப்புக்கொடி; விசாரணைகள் ஆரம்பம்!

March 10, 2026

சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைகழக மாணவர்கள் கருப்பு கொடி பறக்க விட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக

Int

இலங்கையில் வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த சர்வதேச நிபுணத்துவ மாநாடு!

March 10, 2026

வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த 2வது சர்வதேச நிபுணத்துவ மாநாடு நாளை (11) முதல் மார்ச் 14 ஆம்

DIG

பிரசாத் ரணசிங்க பிணையில் விடுதலை

March 10, 2026

விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததன் மூலம் ஊழல் குற்றத்தைச் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட

Ir

இலங்கையில் உள்ள தமது நாட்டவரின் சடலங்களைப் மீளப்பெற ஈரான் நடவடிக்கை

March 10, 2026

இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் அமெரிக்காவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான ‘ஐரிஸ் டெனா’ கப்பலைச் சேர்ந்த கடற்படையினரின் சடலங்களை விரைவில்

ceb

கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வேலைநிறுத்தம் தொடரும் – மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள்

March 10, 2026

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Accident

விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

March 10, 2026

கொழும்பு – ரணால பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர்

MAr

நாட்டில் நிலக்கரி ஊழலால் மின்சாரக் கட்டணமும் உயரும் அபாயம் – எஸ்.எம். மரிக்கார்

March 10, 2026

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் உறுதியளித்திருந்தபோதிலும், நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்ததன் மூலம் அரசாங்கம்

Nam

அரசு முறையான கேள்வி கோரல் நடைமுறைகளைப் பின்பற்றாதமையே இன்று நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குக் காரணம்!

March 10, 2026

45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது

nal

2016 பின் அரச சேவையில் இணைந்த அனைவருக்கும் ஓய்வூதியம்!

March 10, 2026

2016 ஆம் ஆண்டின் பின்னர் அரச சேவையில் இணைந்த அனைத்து அதிகாரிகளுக்கும் ஓய்வூதிய உரிமையை உறுதிப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார

Yogarasa

திருச்சி முகாமில் ஈழத்தமிழர்; உண்ணாவிரதப் போராட்டம்!

March 10, 2026

திருச்சி சிறப்பு முகாமில் கடந்த முதலாம் திகதியிலிருந்து இன்றுவரை தாம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஈழத்தமிழரான யோகராசா நவநாதன்

Death-2

மூன்று பிள்ளைகளின் தந்தை தற்கொலை: இளவாலையில் சம்பவம்

March 10, 2026

யாழில், தவறான முடிவெடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(9.3.2026) இடம்பெற்றுள்ளது. டச்சுவீதி, பெரியவிளான், இளவாலை பகுதியைச்

an

ஜனாதிபதியுடன் தேரர்கள் விசேட கலந்துரையாடல்

March 10, 2026

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான இத்தேபானே