மட்டக்களப்பில் 06 நாட்களில் 4 கொலைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 தினங்களில் 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை, 68 வயதுடைய விவசாயி ஒருவர் மிளகாய் தோட்டம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி கடற்கரை வீதி, வீட்டுத்திட்டம் பகுதியில் உள்ள தோட்டத்தில், சிறிமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த குறித்த நபர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள விளாவெட்டுவான் – நாவற்குடா பகுதியில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற மரணவீட்டில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியதில், மண்வெட்டி பிடியால் தாக்கப்பட்ட 35 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை (18) உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கடந்த 17ஆம் திகதி சந்திவெளி பொலிஸ் பிரிவில் உள்ள சித்தாண்டி பகுதியில், பணம் தர மறுத்த தாயை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் 20 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள சிவபுரம் பகுதியில் குடும்பத் தகராறினால் தந்தையை தாக்கிய சம்பவத்தில், படுகாயமடைந்த 58 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதற்காக 25 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனுடன், மகாஓயா – சூரியடி பகுதியில் கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு ரயிலில் மோதுண்டு உயிரிழந்த விசேட அதிரடிப்படை உறுப்பினர் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடங்களுக்கு பொலிஸ் தடயவியல் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேற்படி கொலைச் சம்பவங்கள் தொடர்பில் களுவாஞ்சிக்குடி, சந்திவெளி, ஏறாவூர் மற்றும் வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்