மக்களுக்குப் பாரிய சுமை; 12 வரித் திருத்தங்கள் – மனித உரிமைகள் மையம் குற்றம்

இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த இரண்டு வருட காலத்தில், மக்களுக்குப் பாரிய சுமையை ஏற்படுத்தும் வகையில் 12 வரித் திருத்தங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் மையம் குற்றம் சாட்டியுள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த மையம், சமூகத்தின் அனைத்து பொருளாதார நிலைகளிலும் உள்ள மக்களை இந்த வரித் திருத்தங்கள் ஏதோ ஒரு வகையில் பாதித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய வரித் திருத்தங்கள் காரணமாக பணவீக்கம் உயர்ந்துள்ளமையுடன், பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, வறுமை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், முதலீடுகள் வீழ்ச்சியடைந்து வெளிநாட்டு முதலீடுகள் கைவிடப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அந்த மையம் தெரிவிக்கிறது.

உணவுப் பொருட்கள் கொள்முதல், கல்வி, சுகாதாரம், போக்குவர/த்து மற்றும் இணையவழி (Online) வணிகங்கள் ஆகியவற்றிலும் இந்த வரி உயர்வு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது.

அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் (NGOs) செயற்பாடுகள் மற்றும் சிறு, நடுத்தர அளவிலான வணிகங்களை (SMEs) இலக்கு வைத்தே இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகப் பேரளவிலான வணிகர்களுடன் ஒப்பிடுகையில், சிறு மற்றும் நடுத்தர வணிகர்களே இந்த வரித் திருத்தங்களால் கடுமையான அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட 12 முக்கிய வரித் திருத்தங்கள்:

மதுவரி/ சுங்கத் தீர்வை (2025 ஜனவரி): மதுபானம், சிகரெட், புகையிலை, இனிப்பு பானங்கள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கான வரி 6% இனால் உயர்த்தப்பட்டது.

மின்சார வாகனங்கள் (EV) வரி (2025 பெப்ரவரி): மின்சார வாகனங்களுக்கான வரி விகிதங்கள் 100% (இரட்டிப்பாக) உயர்த்தப்பட்டன.

வாகன இறக்குமதி வரி (2025 பெப்ரவரி): சுங்க வரி விலக்குகள் நீக்கப்பட்டு 20% இறக்குமதி வரி அறிமுகப்படுத்தப்பட்டதுடன், 50% கூடுதல் வரியுடன் (Surcharge) மொத்த வரி 30% ஆக உயர்த்தப்பட்டது.

நிறுத்தி வைத்தல் வரி – (2025 ஏப்ரல்): வங்கி வைப்பு வட்டி மீதான வரி 5% இலிருந்து 10% ஆக இரட்டிப்பாக்கப்பட்டது. (குறைந்த வருமானம் பெறுவோர் சுய சான்றளிப்பு மூலம் விலக்கு பெறலாம்).

நிறுவன வருமான வரி (2025 ஏப்ரல்): மதுபானம், புகையிலை மற்றும் சூதாட்ட வணிகங்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கான வரி 40% இலிருந்து 45% ஆக உயர்த்தப்பட்டது.

சேவை ஏற்றுமதி வரி (2025 ஏப்ரல்): முன்னர் வரி விலக்கு அளிக்கப்பட்ட சேவை ஏற்றுமதிகள் மற்றும் வெளிநாட்டு வருமானங்களுக்கு அதிகபட்சமாக 15% வருமான வரி விதிக்கப்பட்டது.

சுங்க இறக்குமதி வரிகள் (2026 ஏப்ரல்): பழைய வரி முறைகள் திருத்தப்பட்டு 0%, 10%, 20% மற்றும் 30% என புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 30% உயர் வரி விதிக்கப்பட்டது.

வாகன சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி – (2026 மே): வாகன இறக்குமதிக்கு 2.5% சமூக பாதுகாப்பு வரி விதிக்கப்பட்டது.

வாகன இறக்குமதி கூடுதல் வரி (2026 மே): 30% சுங்க வரியுடன் 50% கூடுதல் வரி விதிக்கப்பட்டதால் மொத்த வரி 45% ஆக உயர்ந்தது. இது 2026 டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மூலதன லாப வரி (2026 ஜூன்): தனிநபர்கள் மற்றும் பங்கான்மைகளுக்கு 10% இலிருந்து 15% ஆகவும், அறக்கட்டளைகள் (Trusts), பரஸ்பர நிதிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு 10% இலிருந்து 30% ஆகவும் வரிகள் உயர்த்தப்பட்டன.

தொழில்முறை வல்லுநர்களின் நிறுத்தி வைத்தல் வரி (2026 ஜூன்): புகைப்படக் கலைஞர்கள், கலைஞர்கள், தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் சமூக ஊடக நிபுணர்கள் போன்றோரின் மாத வருமானம் ரூ. 100,000 ஐ விஞ்சினால் 5% வரி விதிக்கப்பட்டது.

டிஜிட்டல் சேவை VAT வரி (2026 ஜூலை): இலங்கையில் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு 18% VAT வரி விதிக்கப்பட்ட போதிலும், இதன் நடைமுறைப்படுத்தல் இன்னும் முழுமையடையவில்லை.

இந்தநிலையில், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் உணவு, சுகாதாரம் (மருந்துகள் மற்றும் உபகரணங்கள்), கல்வி (பாடசாலை உபகரணங்கள்) மற்றும் தொழில்துறை (மீன்பிடி, விவசாயம், மூலப்பொருட்கள்) போன்ற அத்தியாவசியத் துறைகளை இலக்கு வைத்து வரித் திருத்தங்கள் மற்றும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் மையம் வலியுறுத்தியுள்ளது.

IMG_1052

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

November 2, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, ஒக்டேன்

IMG_1051

’எரிவாயுவை பதுக்க வேண்டாம்’!

November 2, 2026

எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி வைத்தல், விற்பனையைக் கட்டுப்படுத்துதல், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல்

IMG_1049

காலநிலை முன் அறிவிப்பு!

November 2, 2026

நாட்டின்; பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியகூறுகள்

IMG_1048

பொதுஜன பெரமுனவின் கிராமம் தோறும் கூட்டங்கள் ஆரம்பம்!

November 2, 2026

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராமம் தோறும் மக்கள் சந்திப்புக் கூட்டங்கள் இன்று முதல் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் செயற்பாட்டுப்

IMG_1047

சீன அரசின் உதவியுடன் 9 பாலங்கள்

November 2, 2026

சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இலங்கையின் 9 மாவட்டங்களில் சேதமடைந்த 9 பாலங்களைப் புதிதாக நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ், கம்பஹா

IMG_1046

முரசு சூறாவளி தீவிரமடைகிறது!

November 2, 2026

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள “முரசு” (Murasu) சூறாவளி தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று (2) பிற்பகல்

IMG_1045

யாழில் பரபரப்பு! – நடந்தது என்ன?

November 2, 2026

யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் வளர்ப்பு ஆடு ஒன்றைத் திருடி, முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்ல முற்பட்ட இருவர் அப்பகுதி இளைஞர்களால்

acci main

அளவெட்டியில் விபத்து: இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

November 2, 2026

யாழ்ப்பாணம், அளவெட்டி – அழுக்கை சந்தி பகுதியில் நேற்றைய தினம் (1) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள்

arrest

கொக்கேய்னுடன் தச்சர் கைது!

November 2, 2026

சுமார் 4 கோடியே 94 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘கொக்கேய்ன்’ போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச

gun

சிறையிலிருந்து தப்ப முயன்ற கைதி துப்பாக்கிச் சூட்டில் பலி!

November 2, 2026

பல்லேகலை – தும்பறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்

hu

மக்களுக்குப் பாரிய சுமை; 12 வரித் திருத்தங்கள் – மனித உரிமைகள் மையம் குற்றம்

November 2, 2026

இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த இரண்டு வருட காலத்தில், மக்களுக்குப் பாரிய சுமையை ஏற்படுத்தும் வகையில் 12 வரித்

fuel_1

எரிபொருட்கள் விலை அதிகரிப்பு

November 2, 2026

நேற்று(1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைத்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மண்ணெண்ணெய் தவிர