மக்களின் ஜனநாயக உரிமையை இல்லாமலாக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்கின்றது – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

வெளிப்படைத்தன்மை தொடர்பில் கதைத்த இந்த அரசாங்கம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்வனவு செய்துள்ள தகவல்களை கேட்டால், அதனை வழங்குவதில்லை. இதன் மூலம் மூலம் மக்களின் ஜனநாயக உரிமையை இல்லாமலாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளி்க்கிழமை (12) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கி மீளாய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்துவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மத்திய கிழக்கில் இடம்பெறும் யுத்தம் எமது நாட்டுக்கு போன்று உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உலக நாடுகள் அதனை சமம்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்தும் இருக்கிறது. மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்தது. இந்த விலை அதிகரிப்பு உலக நாடுகளில் நூற்றுக்கு 28 வீதமாகவே இருக்கிறது. ஆனால் இலங்கையில் எரிபொருள் விலை நூற்றுக்கு 48 வீதத்தால் அதிகரித்துள்ளது.

அதேபோன்று இந்த வருடத்துக்குள் எமது நாட்டில் 6 தடவைகள் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அந்த நாடுகளில் தற்போது எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. இறுதியாக மே மாதம் 30ஆம் திகதி எமது நாட்டில் எரிபொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்படும்போது, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் 37ரூபா குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. நாங்கள் அதிகவிலைக்கு எரிபொருள் கொள்வனவு செய்துள்ளமையே இதற்கு காரணமாகும்.

எதிர்வரும் 5 மாதங்களுக்கு எரிபொருளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எங்களிடம் போதுமானளவு கையிருப்பு இருப்பதாக ஜனாதிபதி மார்ச் மாதம் 5ஆம் திகதி தெரிவித்திருந்தார். ஆனால் மார்ச் 3ஆம் திகதி ஒரு பீப்பாய் டீசல் 121 டொலருக்கு எடுத்திருக்கிறது. மார்ச் மாதம்20ஆம் திகதி 228 டொலருக்கு எடுத்திருக்கிறது. மார்ச் மாதம் 21ஆம் திகதி 345 டொலருக்கு எடுத்திருக்கிறது. இவ்வாறு அதிக விலைக்கு எரிபொருள் கொள்வனவு செய்திருக்கிறார்கள். அதனாலே எரிபொருட்களின் விலை இந்தளவு அதிகரிக்கப்பட காரணமாகும்.

அதேபோன்று தரமற்ற நிலக்கரி கொள்வனவு காரணமாக இரண்டு கப்பல் எரிபொருள் மின் உற்பத்திக்காக வழங்க வேண்டி ஏற்பட்டிரு்க்கிறது. முகாமைத்துவ பிரச்சினையாலே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் இவ்வாறான நெருக்கடி நிலைமை ஏற்படும்போது எவ்வாறு முகாமைத்துவம் செய்துகொள்வது என்பது முக்கியமாகும். மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக எங்களுக்கு எரிபொருள் கொள்வனவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றே விஜித்த ஹேரத் தெரிவித்திருந்தார். ஆனால் அரசாங்கம் ஒரு பீப்பாய் எரிபொருள் 345 டொலருக்கே கொள்வனவு செய்திருக்கிறது.

அதேநேரம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்வனவு செய்துள்ள தகவல்களை கேட்டால், அதனை வழங்குவதில்லை. அதனால் தகவல் அறியும் உரிமையை செயலிழக்கச்செய்திருப்பதாகவே தெரிகிறது. ஏனெனில் இவர்கள் தகவல்களை மறைக்கிறார்கள். வெளிப்படைத்தன்மை தொடர்பில் கதைத்த இந்த அரசாங்கம் தகவல்களை பெற்றுத்தருவதாக தெரிவித்த அரசாங்கம், அவ்வாறான அரசாங்கம் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமையை இல்லாமலாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது என்றார்.

aaa

மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும்

September 13, 2026

பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பை எடையை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு

wat

வறட்சியான வானிலை – 43,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகம்!

September 13, 2026

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 43,221 குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

photo-collage.png

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி!

September 13, 2026

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

image-483-edited (1)

“தனித்துப் போட்டியிட்டாலும் தவெக அரசுக்கான ஆதரவு தொடரும்; ஆட்சிக்கு பாதிப்பில்லை!” – பெ. சண்முகம் விளக்கம்

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் இடதுசாரி கட்சிகள் தனித்துக் களமிறங்கினாலும், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து

dailythanthi_2026-09-13_zjqobfer_State-01

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவு: ஆளுநர் அர்லேகருடன் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சந்திப்பு!

September 13, 2026

சென்னை: 17-வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்

dailythanthi_2026-08-25_1ha14b7k_CHENNAI-06

“முதலமைச்சர் விஜய் மீது நம்பிக்கை உள்ளது!” – நடிகை கஸ்தூரி

September 13, 2026

சென்னை: ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி, தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை

26-6aa6392b9a6cd

அமைச்சர் நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சை பேச்சு: திமுக எம்.பி. ஆ. ராசா மீது தவெக காவல் துறையில் புகார்!

September 13, 2026

சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ. ராசா

thara

5 முனைப் போட்டியால் சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ளது!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், தேர்தல் களம்

1200-675-27028368-thumbnail-16x9-veerapandiyan

இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கும் இடதுசாரிகள்: தவெக ஆதரவுக் கோரிக்கையை நிராகரித்தது சிபிஐ!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், எந்தக் கூட்டணியிலும் இடம்பெறாமல் இடதுசாரி கட்சிகள் (CPI & CPM)

page

இடைத்தேர்தல் களம்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்